திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர் 24ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும். அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது.
1/5
கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழா வரும் நவ. 24ஆம் தேதி (செவ்வாய்) அன்று நடைபெறும். அன்றைய தினம் மகா தீபம் ஏற்றப்படுவதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு வருகை தருவார்கள். இது வருடாவருடம் நடைபெறும் வைபவம் ஆகும்.
2/5
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
அந்த வகையில், வரும் நவம்பர் 24ஆம் தேதி அன்று (செவ்வாய்) திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாகும். கல்வி நிறுவனங்கள் தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
3/5
மாற்று வேலை நாள்
வரும் நவம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதால், அதற்கு ஈடாக, மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் அரசு சார்புடைய நிறுவனங்களும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி (சனி) அன்று இயங்கும் என அரிவிக்கப்பட்டுள்ளது.
4/5
மாவட்டக் கருவூலம் செயல்படும்
அதேநேரத்தில், திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை என்பதால் நவம்பர் 24ஆம் தேதி அன்று மாவட்டத்தில் உள்ள மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச எண்ணிக்கையுடனான ஊழியர்களை கொண்டு இயங்கும் என மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் அறிவித்துள்ளார்.
5/5
சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், எளிய தரிசனத்திற்கான சேவைகளையும் அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றன.