• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /கார்த்திகை தீபம்: திருவண்ணாமலை கோயிலில் கட்டணம் தரிசனம் ரத்து.. இலவச பாஸ் பெறுவது எப்படி?

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலை கோயிலில் கட்டணம் தரிசனம் ரத்து.. இலவச பாஸ் பெறுவது எப்படி?

Written ByUmabarkavi K
Published: Nov 21, 2026, 16:44 IST|Updated: Nov 21, 2026, 17:38 IST
joinshare
Tiruvannamalai Karthigai Deepam: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை கோயிலில் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக 3,000 பக்தர்களுக்கு இலவச பாஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tiruvannamalai Karthigai Deepam: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
 

Tiruvannamalai Karthigai Deepam1/5

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். குறிப்பாக, விசேஷ தினங்கள் தொடர் விடுமுறை நாட்களில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருவண்ணாமலை கோயிலில் ஒரு மௌனம் 24ஆம் தேதி கோலாகலமாக கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா அன்று பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
Tiruvannamalai Karthigai Deepam2/5

திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபம் அன்று கட்டண தரிசனம் ரத்து

அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் அன்று கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கட்டண தரிசனம் மட்டுமே ரத்து செய்யப்படும் நிலையில், சர்வ தரிசனம் பக்தர்கள் செய்யலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tiruvannamalai Karthigai Deepam3/5

திருவண்ணாமலை அண்ணாமலை உச்சியில் மகா தீபம்

திருவண்ணாமலை கோயிலில் நவம்பர் 24ஆம் தேதி அன்று அதிகாலை 4:00 மணிக்கு கோவிலுக்குள் பரணி தீபமும், மாலை 6:00 மணிக்கு 2668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த நாளில் பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வார்கள். இதனால் கோவிலில் பக்தர்களுக்கும் அலை மோதி காணப்படும் . இந்த நிலையில் கோவில் நிர்வாகம் முக்கிய நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.
Tiruvannamalai Karthigai Deepam4/5

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் அன்று 3,000 பக்தர்களுக்கு அனுமதி

மேலும், கார்த்திகை தீபம் என்று 3000 பக்தர்களுக்கு ஆன்லைனில் இலவச அனுமதி சீட்டுகள் வழங்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த 1500 பேருக்கும், வெளியூர் பக்தர்களுக்கு 1500 பேருக்கும் இலவச பாஸ் வழங்கப்படும் என இந்து சமய அறநிலைத்துறை தெரிவித்திருக்கிறது. ஆன்லைன் மூலம் தேர்வு செய்யும் பக்தர்களில் இருந்து மொத்தம் 3000 பேர் தேர்வு செய்யப்பட்டு தீபத்தை கண்டு களிப்பதற்கான அனுமதி பாசம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Tiruvannamalai Karthigai Deepam5/5

பக்தர்கள் இலவச பாஸ் எப்படி பெறலாம்?

கார்த்திகை தீபம் அன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தரிசனம் செய்ய பக்தர்கள் அறநிலையத்துறையின் tnhrce.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி முன்பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
TAGS:
Tamil Nadu

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

2

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

3

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

4

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

5

திருவண்ணாமலையில் கிரிவலம் போறீங்களா? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இதற்கெல்லாம் தடை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.