திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். முழு விவரம் இங்கே
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
1/6
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்
பெண் கல்வியை மேம்படுத்தவும், பெண் சிசுக்கொலையை ஒழிக்கவும், ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் மனப்போக்கை கட்டுப்படுத்தவும், சிறு குடும்ப முறையை ஊக்குவிக்கவும் 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியத் திட்டமான பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டமாகும்.
2/6
ரூ.50,000 க்கான வைப்புத் தொகை
இத்திட்டத்தின் கீழ், ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள பெற்றோர் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்போது அப்பெண் குழந்தைக்கு ரூ.50,000 க்கான வைப்புத் தொகை ரசீதும், இரண்டு பெண் குழந்தை மட்டும் உள்ள பெற்றோர் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்போது, இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தலா ரூ.25,000- வீதம் வைப்புத் தொகை ரசீது வழங்கப்பட்டு வருகிறது.
3/6
முதிர்வு தொகை
18-வயது முதிர்வடையும் போது இத்தொகையினை வட்டியுடன் பெற்று பயன்பெறலாம். திருவாரூர் மாவட்டத்தில் வைப்புத் தொகை ரசீதுகள் பெற்று, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் நாளது தேதி வரை முதிர்வு தொகை பெறாதவர்களுக்காக திருவாரூர் மாவட்டத்தினர் விண்ணப்பிக்கலாம்.
4/6
விண்ணப்பிப்பது எப்படி?
கொரடாச்சேரி, மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நன்னிலம், குடவாசல் ஆகிய 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சமூகநல விரிவாக்க அலுவலர் மற்றும் மகளிர் ஊர்நல அலுவலர்களிடம் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
5/6
ஆவணங்கள்
ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை அணுகும்போது, பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வைப்புத்தொகை ரசீது நகல், 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், வங்கி கணக்கு முன் அட்டை நகல், ரசீதிலும் வங்கிக் கணக்கிலும் ஒரே பெயராக இருத்தல் வேண்டும்.
6/6
திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு
பெயரில் சிறு மாற்றங்கள் இருப்பின் நோட்டரி பப்ளிக் சான்றும், முழு பெயர் மாற்றம் இருப்பின் அரசிதழ் நகலுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.