• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /விவசாயிகளுக்கு குட் நியூஸ்! ரொக்க விலையில் விதைகள், உரங்கள் விற்பனை.. எப்படி பெறுவது?

விவசாயிகளுக்கு குட் நியூஸ்! ரொக்க விலையில் விதைகள், உரங்கள் விற்பனை.. எப்படி பெறுவது?

Written ByUmabarkavi K
Published: Oct 06, 2026, 12:10 PM IST|Updated: Oct 06, 2026, 12:28 PM IST
joinshare
TN Govt: கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரொக்க விலையில் விதைகள், உரங்கள் விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TN Govt: விவசாயிகள் உரங்கள், விதைகளை எம்ஆர்பி விலைக்கு மிகாமல் ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

TN Govt1/5

கூட்டுறவுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழக அரசு விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருகிறது. விவசாயிகளுக்கு பொருளதார ரீதியாக உதவும் வகையில், பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், கூட்டுறவுத்துறை முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
TN Govt2/5

கூட்டுறவு சங்களில் விதைகள், உரங்கள் விற்பனை

அதாவது, கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரொக்க விலையில் விதைகள், உறங்கள் விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்து இருக்கிறது. இதுகுறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் செயல்பட்டு வரும் தொடக்க மேலாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் முலம் விவசாயிகளுக்கு பயிர்ச் சாகுபடிக்கும் தேவையான நிதியானது குறுகிய காலக் கடனாக வழங்கப்பட்டு வருகிறது.
TN Govt3/5

கூட்டுறவு சங்கங்களில் விதைகள், உரங்கள் ரொக்க விலையில் விற்பனை

மேலும், இக்கடனின் ஒரு பகுதியாக விதைகள், ரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக இல்லாத விவசாயிகளும் உடனடியாக உறுப்பினராக சேர்ந்து, குறைந்த வட்டியில் வழங்கப்படும் பயிர்க்கடனை பெற்று பயனடையலாம். இதன் மூலம் விதைகள், உரங்களை பெற முடியும்.
TN Govt4/5

விவசாயிகள் அதிகபட்ச விற்பனை விலைக்கு மிகாமல் பெறலாம்

இந்த நிலையில், அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில், விதைகள், உரங்கள் உள்ளிட்டவற்றை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மிகாமல் ரொக்மாக பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
TN Govt5/5

ரொக்க விலையில் விதைகள், உரங்களை பெறுவது எப்படி?

விவசாயிகள் ரொக்க விலையில் உரம், விதைகளை பயிர்ச் சாகுபடி பரப்பு மற்றும் நில ஆவணங்களின் அடிப்படையில் இவற்றை ரொக்கம் கொடுத்து நேரடியாக வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் ரொக்க விலையில் விதைகள், உரங்களை வாங்கி பயனடைய வேண்டும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
சவுதிக்கு எதிராக ஹூதிகளின் மிகப்பெரிய தாக்குதல்.. அமெரிக்க கப்பல்களை குறிவைக்கும் ஈரான்!

சவுதிக்கு எதிராக ஹூதிகளின் மிகப்பெரிய தாக்குதல்.. அமெரிக்க கப்பல்களை குறிவைக்கும் ஈரான்!

2

சென்னை டூ விழுப்புரம்.. ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. டைமிங் நோட் பண்ணுங்க

3

63% அகவிலைப்படி: இன்று வருகிறதா டிஏ உயர்வு அறிவிப்பு? அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?

4

“ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்”.. ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய INDIA கூட்டணி

5

“நான் எந்த தவறும் செய்யவில்லை..” புலம்பித்தள்ளிய ரகுல் ப்ரீத் சிங்! என்ன ஆச்சு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.