• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /“நான் எந்த தவறும் செய்யவில்லை..” புலம்பித்தள்ளிய ரகுல் ப்ரீத் சிங்! என்ன ஆச்சு?

“நான் எந்த தவறும் செய்யவில்லை..” புலம்பித்தள்ளிய ரகுல் ப்ரீத் சிங்! என்ன ஆச்சு?

நடிகை ரகுல் ப்ரீத் சிங், சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், தன்னை பற்றி பொய் செய்தி ஒன்று வலம் வருவதாகவும் அது உண்மையல்ல என்றும் எழுதியிருந்தார்.

Written ByYuvashree M
Published: Oct 06, 2026, 12:27 PM IST|Updated: Oct 06, 2026, 12:35 PM IST
joinshare
“நான் எந்த தவறும் செய்யவில்லை..” புலம்பித்தள்ளிய ரகுல் ப்ரீத் சிங்! என்ன ஆச்சு?
Image Credit: Rakhul Preet Singh | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சவுதிக்கு எதிராக ஹூதிகளின் மிகப்பெரிய தாக்குதல்.. அமெரிக்க கப்பல்களை குறிவைக்கும் ஈரான்!

சவுதிக்கு எதிராக ஹூதிகளின் மிகப்பெரிய தாக்குதல்.. அமெரிக்க கப்பல்களை குறிவைக்கும் ஈரான்!

2

சென்னை டூ விழுப்புரம்.. ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. டைமிங் நோட் பண்ணுங்க

3

63% அகவிலைப்படி: இன்று வருகிறதா டிஏ உயர்வு அறிவிப்பு? அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?

4

“ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்”.. ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய INDIA கூட்டணி

5

“நான் எந்த தவறும் செய்யவில்லை..” புலம்பித்தள்ளிய ரகுல் ப்ரீத் சிங்! என்ன ஆச்சு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழில் என்ஜிகே, தேவ், தீரன், இந்தியன் 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர், ரகுல் ப்ரீத் சிங். தமிழில் மட்டுமன்றி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர்தான், சமீபத்தில் தன்னுடைய எக்ஸ் தள பதிவின் மூலம் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

வருமான வரித்துறை சோதனை என செய்தி..!

கடந்த மாதம், ரகுல் ப்ரீத் சிங்கிற்கு தொடர்புடைய மும்பையின் 12 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டதாக செய்திகள் பரவியது.

ரகுல் ப்ரீத் சிங், பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான வாசு பக்னானி மற்றும் பேனோரமா ஸ்டுடியோஸ் ஆகியோருடன் தொடர்புடைய மும்பையின் 12 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. திரைப்பட தயாரிப்பு மற்றும் நிதி மேலாண்மையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

திரைப்படங்களுக்கான முதலீடுகள், வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட சந்தேகத்திற்கிடமான நிதியுதவிகள் சார்ந்து இந்த சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியானது. மேலும், பட தயாரிப்பு பணிகள், பல வெளிநாடுகளுக்கும் பணம் அணுப்பப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

தயாரிப்பாளர் வாசு பக்னானி, பூஜா எண்டெர்டெயின்மெண்ட் எனும் நிறுவனத்தை நடத்தி வந்தர். அவருடைய மகன் ஜாக்கி பக்னானியைதான், ரகுல் ப்ரீத் சிங் திருமணம் செய்திருந்தர். இந்த நிறுவனம், சுமார் 30க்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களை தயாரித்திருக்கிறது.

ரகுல் ப்ரீத் சிங் கொடுத்த விளக்கம்!

ரகுல் ப்ரீத் சிங், இது குறித்து ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். அதில், அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

”தங்களை ஆன்லைன் நிருபர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலரும், சில முக்கிய ஊடகப் பத்திரிகையாளர்களும், உண்மைகளைச் சரிபார்க்காமல் செய்திகளை பரபரப்பாக்கும் போக்கு அதிகரித்து வருவதைப் பார்ப்பது மனதை நொறுக்குகிறது.

எனவே, இந்த விஷயத்தை ஒருமுறைக்கு ஒருமுறை தெளிவுபடுத்துவோம். அந்த வருமான வரித் தேடல் என்னைப் பற்றியது அல்ல. நான் ஆயுதப் படைகளின் பின்னணியைச் சேர்ந்தவன் என்பதையும், இந்தத் துறையில் எனக்கு எந்த காட்பாதரும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் எனது முழுக்க முழுக்க கடின உழைப்பால் முன்னேறியவன், மேலும் ஒரு பொறுப்புள்ள, சட்டத்தை மதிக்கும் குடிமகனாக எனது 20 வயதிலிருந்தே செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்தி வருகிறேன்.

It’s heartbreaking to see that There’s a growing trend amongst the self styled online reporters & some main stream media journalists to sensationalise the news without verifying facts. Let’s therefore set the record straight once for all. The IT search was not pertaining to me. Let it be known that I am from the Armed Forces background & had no Godfather in the Industry. I have come up through sheer hardwork & as a responsible law abiding citizen have been paying my due taxes since the age of 20 years. I am not involved in any kind of illegal Foreign remittance in personal capacity or on behalf of any Production house. I would also add here that I do not hold any Benami property on behalf of anyone anywhere in the country or abroad. Neither ANYONE has EVER gifted me any property at anytime nor do I accept such expensive gifts as a principle. I urge all those who published these false, malicious and speculative reports to retract them and clarify the facts. I understand that everyone running a media business however big has their own commercial pressures. But it cannot come at the cost of facts. And certainly not at the cost of someone's reputation and livelihood.

— Rakul Singh (@Rakulpreet) October 5, 2026

மேலும் படிக்க | 2026ல் இதுவரை ஹிட் ஆன தமிழ் படங்கள்! லிஸ்ட் ரொம்ப பெருசு..இந்த வருஷம் கோலிவுட்டுக்கு செம லக்

நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது எந்தவொரு தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாகவோ எந்தவிதமான சட்டவிரோத வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத்திலும் ஈடுபடவில்லை. மேலும், நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ யாருக்காகவும் நான் எந்த பினாமி சொத்தையும் வைத்திருக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். யாரும் எனக்கு எந்த நேரத்திலும் எந்தச் சொத்தையும் பரிசாகக் கொடுத்ததில்லை, கொள்கையளவில் நானும் அத்தகைய விலையுயர்ந்த பரிசுகளை ஏற்றுக்கொள்வதில்லை.

இந்தத் தவறான, தீய நோக்கமுள்ள மற்றும் ஊக அறிக்கைகளை வெளியிட்ட அனைவரும் அவற்றை வாபஸ் பெற்று, உண்மைகளைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எவ்வளவு பெரிய ஊடகத் தொழிலை நடத்தினாலும், ஒவ்வொருவருக்கும் அவரவர் வணிக அழுத்தங்கள் இருக்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அது உண்மைகளின் இழப்பில் நிகழக்கூடாது. நிச்சயமாக ஒருவரின் நற்பெயருக்கும் வாழ்வாதாரத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடாது” என்று ரகுல் ப்ரீத் சிங் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலகி வருகிறது.

ரகுல் ப்ரீத் சிங் அடுத்ததாக ராமாயணா திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு சூர்ப்பனகை கதாப்பாத்திரம் ஆகும்.

மேலும் படிக்க | ‘மண்டாடி’ திரைப்படம் ஓடிடி ரிலீஸ்! எந்த தளத்தில், எப்போது காணலாம்?

Add Zee News as a Preferred Source
TAGS:
Indian Cinema