Southern Railway: தமிழகத்தில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். தொலைதூர பயணங்களுக்கு பெரும்பாலும் ரயில்களில் மக்கள் பயணம் செய்து வருகிறது. இதற்கிடையில், தெற்கு ரயில்வே அவ்வப்போது ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது முக்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 7,9ஆம் தேகிதளல் தேதிகளில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள் கீழ்க்காணும் மாற்றங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அக்டோபர் 7,9ஆம் தேதிகளில் திருச்சி கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அவ்வழித்தடத்தில் செல்லும் ரயில் சேவையில் தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது.
மேலும், நாளை (அக்டோபர் 7) சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127) எழும்பூரிலிருந்து காலை 10:40 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், பயண வழியில் வசதிக்குரிய ஏதேனும் ஒரு ரயில் நிலையத்தில் சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னரே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விழுப்புரம், புதுச்சேரி, சென்னை மற்றும் மயிலாடுதுறை மார்க்கத்தில் தினமும் பயணம் செய்யும் அலுவலக செல்வோர் மற்றும் மாணவர்கள், இந்த மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு தங்களது பயணத் திட்டத்தை மாற்றி அமைத்துக்கொள்ளவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.