Thanjavur Collector Announces: மீனவர்கள் ரூ.20,000 மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரூ.20,000 மானியம் பெறுவது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Fisherman Subsidy; அக்டோபர் 31ஆம் தேதிக்குள் ரூ.20,000 மானியம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவத்தை தஞ்சாவூர் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
1/5
மீனவர்களுக்கு மானியம் அறிவிப்பு
தமிழக அரசு பலதரப்பட்ட மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள், மீனவர்கள், பெண்கள் என அனைவருக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசு மீனவர்களுக்காக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2/5
ரூ.20,000 மானியம் யாரெல்லாம் பெறலாம்?
இதனை தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 8 அலகுகள் இலக்கு நிர்ணயம் செய்து ஆணை பெறப்பட்டுள்ளது. 250 முதல் 1000 ச.மீ அளவிலுள்ள பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில் மீன்வளர்ப்பினை மேற்கொள்ள ஏதுவாக மீன்குஞ்சு, மீன்தீவனம், உரங்கள் ஆகிய மீன்வளர்ப்பிற்கான உள்ளீட்டு பண்ணை பொருள்கள் மற்றும் பறவை தடுப்பு வசதிகள் ஆகிய மீன்வளர்ப்பிற்கான ஒரு அலகிற்கு ஆகும் செலவினம் ரூ.40,000/-ல் 50% மானியமாக ஒரு பண்ணைக்குட்டைக்கு ரூ.20000/-வழங்கப்படும்.
3/5
மீனவர்களுக்கு ரூ.20,000 மானியம் அறிவிப்பு
அதாவது, மீனவர்கள் ரூ.40,000 மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2026-27ம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கை தொடர்பாக 06.08.2026 அன்று மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை சார்ந்து சட்டமன்றத்தில் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலன் அமைச்சர் அவர்களால் "பல்நோக்கு பண்ணகைக்குட்டைகளில் மீன்வளர்ப்பினை மேற்கொள்ள ஏதுவாக மீன்குஞ்சுகள், மீன்தீவனம், போன்ற இடுபொருட்களை வாங்குவதற்குத் தேவையான மானியம் மீன்வளர்ப்போருக்கு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
4/5
மானியம் பெற அக்டோபர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
மேற்கண்ட மானியமானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
5/5
ரூ.20,000 மானியம் பெறுவது எப்படி?
எனவே, மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணபிக்க விரும்பும் பயனாளிகள் தஞ்சாவூர் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணபங்களை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை 31.10.2026 க்குள் தஞ்சாவூர் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்குமாறு என மாவட்ட ஆட்சியர் ரேவதி தெரிவித்துள்ளார்.