Vettri Vegetable Combo: தமிழகத்தில் வெற்றி காய்கறி தொகுப்பு திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. நவம்பர் 7ஆம் தேதி வரை ரூ.100 கொடுத்து, 10 வகையான காய்கறிகளை குடும்ப அட்டைதாரர்கள் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கெல்லாம் காய்கறிகளை பெறலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள்
Vettri Vegetable Combo: வெற்றி காய்கறிகள் தொகுப்பு திட்டத்தில் ஒரு ரேஷன் அட்டைதாரருக்கு ஒரு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1/5
வெற்றி காய்கறிகள் திட்டம்
தமிழக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், வெற்றி காய்கறி தொகுப்பு திட்டத்தை துவங்கி உள்ளது. இதன் மூலம், ரூ.100 கொடுத்து 10 வகையான காய்கறிகளை ரேஷன் அட்டைதாரர்கள் வாங்கிக் கொள்ளலாம். இன்று முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை காய்கறிகளை கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் சென்னையில் 4 நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.
2/5
வெற்றி காய்கறிகள் தொகுப்பு திட்டத்தில் என்னென்ன உள்ளன?
ரூ.100 மதிப்பிலான வெற்றி காய்கறி தொகுப்பு திட்டத்தில் பெரிய வெங்காயம் அரை கிலோ, தக்காளி அரை கிலோ, கத்திரிக்காய் 250 கிராம், உருளைக்கிழங்கு 250 கிராம், கேரட் 200 கிராம், பீன்ஸ் 200 கிராம், பச்சை மிளகாய் 100 கிராம், எலுமிச்சை பழகம் 100 கிராம், இஞசி 500 கிராம், ஒரு தேங்காய் வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு ஒரு காய்கறி தொகுப்பு என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.
3/5
நவம்பர் 7ஆம் தேதி வரை கூட்டுறவு அங்காடிகளில் பெறலாம்
இதனை ரேஷன் அட்டைதாரர்கள் அனைரும் இந்த காய்கறி தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த கூட்டுறவு அங்காடிகளில் காய்கறி தொகுப்புகள் வழங்கப்படுகிறது என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, இதனை அறிந்து கொண்டு, 3 நாட்களில் நுகர்வோர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதார் கார்டு, ரேஷன் அட்டை எதுவும் தேவையில்லை என கூறப்படுகிறது.
4/5
எங்கெல்லாம் கூட்டுறவு அங்காடிகள் இருக்கின்றன?
சென்னையை பொறுததவரை, அண்ணா சாலை, புதுப்பேட்டை, பீச் ரோடு, ரிப்பன் மாளிகை, புது வண்ணாரப்பேட்டை, இந்திரா நகர், கொத்தவால்சாவடி, இப்ராஹிம் சாலை, திருவல்லிக்கேணி, உயர் நீதிமன்ற வளாகம், பார்க் டவுன் ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் காய்கறி தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். திருவள்ளூரை பொறுத்தவரை, பொன்னேரி, செங்குன்றம், திருத்தணி, பெரியகுப்பம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்யப்படுகிறது.
5/5
காஞ்சிபுரம், திருவள்ளூர் கூட்டுறவு அங்காடி விவரம்
காஞ்சிபுரத்தை பொறுத்தவரை காரப்பாக்கம், வையாவூர் சாலை, உத்திரமேரூர், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்யப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நங்கநல்லூர், ஆதம்பாக்கம், திருக்கழுக்குன்றம், கிழக்கு தாம்பரம், தாம்பரம் மேற்கு, பெருங்களத்தூர், சிட்லப்பாக்கம், பல்லாவரம் பகுதிகளில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் 100 ரூபாய் மதிப்பலான 10 வகையான காய்கறி தொகுப்புகள் விற்பனை செய்யப்படுவதாகவும், நுகர்வோர்கள் வாங்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது