• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /திருமணத்திற்கு ரெடியாவது எப்படி? கல்லூரியில் புதிய Course அறிமுகம்.. மாநில அரசு அறிவிப்பு

திருமணத்திற்கு ரெடியாவது எப்படி? கல்லூரியில் புதிய Course அறிமுகம்.. மாநில அரசு அறிவிப்பு

Goa College Marriage Course: ஆரோக்கியமான திருமண உறவை உருவாக்குவது பற்றிய சான்றிதழ் படிப்பு கோவாவில் உள்ள கல்லூரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் படிப்பில் டேட்டிங்கின் நோக்கம், உறவுகள் குறித்த புரிதல், மண வாழ்க்கையின் வித்தியாசம், நீடித்த உறவை உருவாக்க என்ன தேவை என்பது குறித்து கற்றுத்தரப்பட உள்ளது.

Written ByUmabarkavi K
Published: Nov 05, 2026, 02:33 PM IST|Updated: Nov 05, 2026, 02:44 PM IST
joinshare
திருமணத்திற்கு ரெடியாவது எப்படி? கல்லூரியில் புதிய Course அறிமுகம்.. மாநில அரசு அறிவிப்பு

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சிஎஸ்கே கலீல் அகமது, எல்லிஸை கழட்டிவிட்டது சரியா? லிவிங்ஸ்டன் தேவையா?

சிஎஸ்கே கலீல் அகமது, எல்லிஸை கழட்டிவிட்டது சரியா? லிவிங்ஸ்டன் தேவையா?

2

இந்தியா விசா விதிகளில் பெரிய மாற்றம்: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய அரசின் புதிய திட்டம்

3

Explained : 28 ஆண்டுகள் நடந்தே உலகை சுற்றிய நபர்! ஒரு வழியாக வீடு திரும்பியது எப்படி?

4

திருமணத்திற்கு ரெடியாவது எப்படி? கல்லூரியில் புதிய Course அறிமுகம்.. மாநில அரசு அறிவிப்பு

5

UPS Rules: பணியில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஓய்வூதிய பங்களிப்பு கிடைக்காதா? DoPPW விளக்கம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Goa College Marriage Course: இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் பணத்தை வாரி இறைத்து ஜாதகம், ஜோதிடம் என ஆயிரம் பொருத்தம் பார்த்து பலரும் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கின்றனர். திருமண பந்தத்தில் நுழையும் இளம்ஜோடிகளில் சிலர், தேனிலுக்கு செல்லும் இடத்தில் கூட, பரஸ்பர புரிதல் இல்லாமல் சண்டையோடு பிரிந்து செல்வது அரங்கேறி வருகிறது. இதில் காதல் திருமணம் செய்பவர்கள் விதிவிலக்கல்ல. 

சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், பெண்களுக்கான பாகுபாடுகள், மரியாதை, புரிதல் போன்ற காரணங்களால் திருமண பந்தம் நீடித்து செல்வதில்லை. இதனால், விவாகரத்துகளும் அதிகரித்து இருப்பதாகவும் ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.  இந்த நிலையில், திருமண உறவில் உள்ள சிக்கல்கள் மற்றும அந்த உறவுகளை நீடித்து எடுத்து செல்வது எப்படி என்பது குறித்த 15 நாட்கள் பயிற்சி வகுப்புக்கான சான்றிதழ் படிப்ப கோவை மாநிலத்தில் உள்ள கல்லூரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நீடித்த திருமண பந்தத்துக்கு சான்றிதழ் படிப்பு

கோவா மாநிலத்தில் உள்ள மனையியல் கல்லூரியின்  திருமணம் குறித்து சான்றிதழ் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருமணத் தயார்நிலை: ஆரோக்கியமான மற்றும் நீடித்த உறவுகளுக்குத் தயாராகுதல்” என்ற தலைப்பில் 15 நாட்கள் சான்றிதழ் படிப்பை கோவா மனையியல் கல்லூரி அறிமுகம் செய்துள்ளது. இந்த சான்றிதழ் படிப்பு டிசம்பர் 2ஆம் தேதி முதல் டிசம்பர் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  

கோவாவில் விவாகரத்து விகிதத்தைக் குறைப்பதற்காகத் திருமணத்திற்கு முந்தைய கவுன்சிலிங்கை அறிமுகப்படுத்துவதாக அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவித்ததைத் தொடர்ந்து இந்தப் படிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள், திருமணம் ஆகாத இளைஞர்கள் மற்றும் ஆரோக்கியமான உறவுகளை வளர்த்துக்கொள்ள விரும்பும் ஆர்வலர்கள் இதில் பங்கேற்கலாம். திருமணத் தயார்நிலை குறித்த ஆறு முக்கியமான அம்சங்களை இந்த சான்றிதழ் படிப்பில் கற்றுத் தரப்படுகிறது.

சான்றிதழ் படிப்பில் உள்ள அம்சங்கள்

திருமண வாழ்க்கை குறித்த சான்றிதழ் படிப்பில் முக்கிய விஷயங்கள் குறித்து கற்றுத்தரப்படுகிறது. ஒரு ஆரோக்கியமான திருமண உறவு என்பது, முதலில் நம்மை நாமே தெளிவாகப் புரிந்து கொள்வதிலிருந்தே தொடங்குகிறது.  

சுய புரிதல்: நம்முடைய நன்மதிப்புகள், உணர்வுப்பூர்வமான தேவைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் தனிப்பட்ட எல்லைகளைப் தெளிவாக அறிந்து கொள்வது, சரியான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க பெரிதும் உதவுவது தொடர்பான பாடங்கள்

உணர்வுகளைக் கையாளும் முறை: கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது நாம் எப்படி எதிர்வினை ஆட்டுகிறோம், அன்பை எவ்வாறு வெளிப்படுத்துகிறோம், மனஅழுத்தத்தை எப்படிச் சமாளிக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்வது மிகவும் முக்கியம்.

பரஸ்பர மரியாதை: இத்தகைய தன்மைகளைப் புரிந்து கொள்வதன் மூலம், துணையுடன் வெளிப்படையாகப் பேசவும், ஒருவரையொருவர் மதித்து பலமான உறவை உருவாக்குவது பற்றி பாடங்கள்.

டேட்டிங்: இப்பாடத்திட்டத்தில் டேட்டிங்கின் நோக்கத்தையும் செயல்பாடுகளையும் புரிந்துகொள்ளுதல் என்ற தலைப்பில் தனியாக ஒரு பயிற்சி வகுப்பும் இடம்பெறுகிறது

பாலினம்: ஆண் மற்றும் பெண் தன்மைகள் குறித்த சமூகப் பார்வைகள், உறவுகள், வீட்டுப் பொறுப்புகள், உணர்வுகளை வெளிப்படுத்தும் முறை மற்றும் முடிவெடுக்கும் திறன் குறித்த பாடங்கள் இடம்பெறுகிறது.

நீடித்த உறவு: நிதி மேலாண்மை, வீட்டுப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளுதல், குடும்ப முடிவுகளை எடுத்தல் மற்றும் கருத்து வேறுபாடுகளை சமாளித்து நீடித்த உறவுகள் குறித்த பாடங்கள்.

கோவாவில் அதிகரித்த விவாகரத்துகள்

மாநில சட்டத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, 2022 முதல் 2025-ஆம் ஆண்டுக்குள் கோவாவின் உரிமையியல் நீதிமன்றங்களில் 3,000-க்கும் மேற்பட்ட விவாகரத்து  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 2024-ஆம் ஆண்டில் மட்டும் 947 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனால், மாநில அரசு கல்யாண வாழ்க்கை குறித்த சான்றிதழ் படிப்பை கொண்டு வந்துள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
India