டிஎன்பில் 2026 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த டிஎன்பிஎல் தொடரில் முக்கிய விருதுகளை வென்று கவனம் ஈர்த்த வீரர்கள் யார் யார் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
10வது டிஎன்பிஎல் தொடரில் VIDA கோவை கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. மதுரை பேந்தர்ஸ் அணி இறுதிப்போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. குவாலிபயர் 2 போட்டியோடு திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியும், எலிமினேட்டர் போட்டியோடு திருப்பூர் அணியும் வெளியேறியது. நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறவில்லை.
1/9
தீபன் லிங்கேஷ்
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவருக்கான விருது: VIDA கோவை கிங்ஸ் அணி வீரர் தீபன் லிங்கேஷ் (9 போட்டிகள் - 17 விக்கெட்)
2/9
பி. சச்சின்
அதிக ரன்கள் குவித்தவருக்கான விருது: VIDA கோவை கிங்ஸ் அணி வீரர் பி. சச்சின் (9 இன்னிங்ஸ் - 428 ரன்கள்)
3/9
சஞ்சய் யாதவ்
சிறந்த ஆல்-ரரவுண்டருக்கான விருது: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியின் ஆல்-ரவுண்டர் சஞ்சய் யாதவ் (149 ரன்கள் அடித்து, 7 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்)
4/9
அமித் சாத்விக்
தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட சிறந்த பேட்டருக்கான விருது: ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியின் ஓபனர் அமித் சாத்விக் (8 இன்னிங்ஸ் - ரன்கள்: 228, ஸ்ட்ரைக் ரேட்: 198.26)
5/9
ஆர்.எஸ். அம்ப்ரிஷ்
தொடரின் வளர்ந்து வரும் வீரருக்கான விருது: VIDA கோவை கிங்ஸ் அணியின் ஆர். எஸ். அம்ப்ரிஷ் (50 ரன்கள் அடித்து, 6 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்)
6/9
பி. சச்சின்
தொடரில் அதிக பவுண்டரிகள் அடித்தவருக்கான விருது: VIDA கோவை கிங்ஸ் அணியின் பி. சச்சின். (9 இன்னிங்ஸ் - 41 பவுண்டரிகள்)
7/9
துஷார் ரஹேஜா
தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவருக்கான விருது: ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியின் ஓபனர் துஷார் ரஹேஜா (8 இன்னிங்ஸ் - 34 சிக்ஸர்கள்)
8/9
தீபன் லிங்கேஷ்
தொடரின் மிகவும் நம்பகமான வீரருக்கான விருது: VIDA கோவை கிங்ஸ் அணியின் தீபன் லிங்கேஷ்
9/9
பி. சச்சின்
தொடர் நாயகன் விருது: VIDA கோவை கிங்ஸ் அணியின் பி. சச்சின்