Today Rasi Palan: இன்று (நவம்பர் 16) திங்கள்கிழமை, ஜப்பசி 30 ஆம் நாள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உண்டான இன்றைய பலன்கள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.
1/13
மேஷம்
மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். சபை நிமித்தமான பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வெளி வட்டாரங்களில் செல்வாக்கும் புகழும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
அஸ்வினி : சாதகமான நாள்.
பரணி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : செல்வாக்கு மேம்படும்.
2/13
ரிஷபம்
எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். சிறு மற்றும் குறுந்தொழில் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் காணப்படும். புதிய தொழில்நுட்ப தேடல்கள் அதிகரிக்கும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். விவேகமான செயல்பாடுகள் முன்னேற்றத்தை உருவாக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கிருத்திகை : முதலீடுகள் மேம்படும்.
ரோகிணி : தேடல்கள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.
3/13
மிதுனம்
உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். மற்றவர்களின் பேச்சுகளை பொறுமையாக கையாளவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிலும் அலட்சியம் இன்றி செயல்படவும். ஜாமின் விஷயங்களை தவிர்க்கவும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
மிருகசீரிஷம் : பொறுப்புகள் மேம்படும்.
திருவாதிரை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
4/13
கடகம்
குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய நண்பர்களால் உற்சாகம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். துணைவர் வழியில் மதிப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். போட்டிகளில் சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : உற்சாகம் உண்டாகும்.
பூசம் : லாபகரமான நாள்.
ஆயில்யம் : சாதகமான நாள்.
5/13
சிம்மம்
உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். அரசியல் விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். வியாபாரத்தில் இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
மகம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
பூரம் : முடிவுகள் பிறக்கும்.
உத்திரம் : தாமதங்கள் விலகும்.
6/13
கன்னி
புதிய முயற்சிகளில் எண்ணியவை ஈடேறும். குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேலையாட்களிடம் பொறுமையுடன் செயல்படவும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் பிறக்கும். கல்வியில் இருந்த மந்த நிலை விலகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்
உத்திரம் : முயற்சிகள் ஈடேறும்.
அஸ்தம் : பொறுமையுடன் செயல்படவும்.
சித்திரை : மந்த நிலை விலகும்.
7/13
துலாம்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். போட்டிகளில் இருந்த தயக்கங்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் குறையும். பணிகளில் அனுகூலம் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் சோர்வு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : தயக்கங்கள் குறையும்.
சுவாதி : அனுகூலமான நாள்.
விசாகம் : சோர்வுகள் உண்டாகும்.
8/13
விருச்சிகம்
சவாலான விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் சிலருக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். அரசு விஷயங்களில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரத்தில் நிதானத்தை கையாளவும். உத்தியோகத்தில் சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அனுஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.
கேட்டை : தைரியம் பிறக்கும்.
9/13
தனுசு
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் உதவியால் சில பிரச்சனைகள் தீரும். வதந்திகளை பொருட்படுத்தாமல் செயல்படவும். மறதி பிரச்சனை குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதில் ஆலோசனை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : பிரச்சனை குறையும்.
உத்திராடம் : முன்னேற்றமான நாள்.
10/13
மகரம்
செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். பேச்சுக்களில் பொறுமையை கையாளவும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதாரத்தில் நெருக்கடிகள் உண்டாகும். இழுப்பறியான சில வரவுகள் கிடைக்கும். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
உத்திராடம் : கவனம் வேண்டும்.
திருவோணம் : நெருக்கடியான நாள்.
அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.
11/13
கும்பம்
அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வெளியூர் சார்ந்த பயண வாய்ப்புகள் மேம்படும். உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். பிறமொழி பேசும் மக்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வியாபார ரீதியான முயற்சிகள் கைகூடும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சதயம் : சிந்தித்து செயல்படவும்.
பூரட்டாதி : முயற்சிகள் கைகூடும்.
12/13
மீனம்
நீண்ட நாட்களாக இருந்து வந்த கவலைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். மனதில் புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதிய விதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். பயணங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். திடீர் வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் சாதகமாகும்.
ரேவதி : சேமிப்புகள் அதிகரிக்கும்.
13/13
பொறுப்புத் துறப்பு
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.