துலீப் டிராபி 2026 இறுதிப்போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து மிரட்டினார். அப்படியிருக்க, துலீப் டிராபி இறுதிப்போட்டியில் இதுவரை அதிக ரன்களை அடித்த டாப் 5 வீரர்களை இங்கு காணலாம்.
துலீப் டிராபி 2026 இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணிக்கு எதிராக கிழக்கு மண்டலம் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணி இரண்டு நாள்கள் முழுமையாக பேட்டிங் செய்து 708 ரன்களை எடுத்து (163 ஓவர்கள்) ஆல்-அவுட்டானது. தெற்கு மண்டலம் அணி நாளை காலை முதல் பேட்டிங் செய்யும். முதல் இன்னிங்ஸில் 709 ரன்களை தாண்டினால் மட்டுமே தெற்கு மண்டலம் அணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும். கிழக்கு மண்டலம் அணிக்கு தற்போது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
1/5
5. சஞ்சய் மஞ்சரேக்கர்
1986ஆம் ஆண்டு துலீப் டிராபி இறுதிப்போட்டியில் மத்திய மண்டலம் அணிக்கு எதிராக மேற்கு மண்டல அணி வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் 278 ரன்களை அடித்தார். இதன்மூலம், துலீப் டிராபி இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியில் 5வது இடத்தை பிடித்துள்ளார். மேற்கு மண்டல அணி (1987) வீரர் எல்எஸ் ராஜ்புத் 275 ரன்களை அடித்து 6வது இடத்திலும், வடக்கு மண்டல அணி (1999) வீரர் சேவாக் 274 ரன்களை அடித்து 7வது இடத்திலும், இன்று கிழக்கு மண்டல அணி இஷான் கிஷன் 270 ரன்களை அடித்து 8வது இடத்திலும் உள்ளனர்.
2/5
4. அருண் லால்
1986ஆம் ஆண்டு மேற்கு மண்டல அணிக்கு எதிராக துலீப் டிராபி இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டல அணி வீரரான அருண் லால் 287 ரன்களை அடித்து இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.
3/5
3. எஸ்.எஸ். பாவே
1994ஆம் ஆண்டு துலீப் டிராபி இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணிக்கு எதிராக மேற்கு மண்டல அணி வீரர் எஸ்.எஸ். பாவே 292 ரன்களை அடித்து இந்த பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார்.
4/5
2. ககன் கௌடா
2001ஆம் ஆண்டு துலீப் டிராபி இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணிக்கு எதிராக மத்திய மண்டல அணி வீரர் ககன் கௌடா 300* ரன்களை அடித்து இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.
5/5
1. ராமன் லம்பா
1987ஆம் ஆண்டு துலீப் டிராபி இறுதிப்போட்டியில் மேற்கு மண்டல அணிக்கு எதிராக வடக்கு மண்டல அணி வீரர் ராமன் லம்பா 320 ரன்களை அடித்து, இன்று வரை இப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார்.