ஒரு சில நாடுகள் தங்களின் நாட்டில் தொழிலாளர்களுக்கு அதிக சம்பளத்தை தருகின்றன. அந்த நாடுகள் என்னென்ன தெரியுமா? லிஸ்டை இங்கு பார்ப்போம்.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது, அந்த நாட்டில் இருக்கும் தொழில் முன்னேற்றத்திலும் தொழிலாளர் நலனிலும்தான் இருக்கிறது. அப்படி, தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கும் நாடு எது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
ஸ்விட்சர்லாந்து
ஒரு நாடு, அதிக சம்பளம் கொடுத்தால்தான் அங்கு நிறைய பேர் வேலை பார்க்க ஆர்வம் காட்டுவர். 2025ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, அதிக சம்பளம் தரும் நாடுகளின் லிஸ்டில் முதலில் ஸ்விட்சர்லாந்துதான் இருக்கிறது. இங்கு வேலை பார்ப்பவர்களுக்கு அமெரிக்க டாலர்களில் 131,416 வருடத்திற்கு வழங்கப்படுகிறது.
2/5
லக்ஸிம்பர்க்
லக்ஸிம்பர்க், இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இங்கு இருப்பவர்களுக்கு வருட வருமானம் அமெரிக்க டாலர்களின் படி 108,672 ஆக இருக்கிறது.
3/5
அமெரிக்கா
மூன்றாவது இடத்தில் அமெரிக்கா இருக்கிறது. இங்கு வருட சம்பளம், அமெரிக்க டாலர்களின் படி 105,482ஆக இருக்கிறது.
4/5
டென்மார்க்
டென்மார்க், மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இங்கு வேலை பார்ப்பவர்களுக்கு சுமார் வருட வருமானம் 93305 அமெரிக்க டாலர்களாக இருக்கிறது.
5/5
ஐஸ்லாந்து
ஐந்தாவது இடத்தில் ஐஸ்லாந்து இருக்கிறது. இங்கு வேலை பார்ப்பவர்களுக்கு அமெரிக்க டாலர்களில் 89,075 கொடுக்கப்படுகிறது.