Toxic Movie Box Office Collection: கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியிலும், ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவான நடிகர் யாஷின் 'டாக்ஸிக்' திரைப்படம் இதுவரை ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
1/5
டாக்ஸிக்
கேஜிஎஃப் படத்தின் மூலம் தென்னிந்தியாவில் பெரிதும் பிரபலமானவர் நடிகர் யாஷ். அப்படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
2/5
டாக்ஸிக்
இந்த சூழலில், கீது மோகன்தாஸ் இயக்கயத்தில் டாக்ஸிக் திரைப்படத்தில் நடித்தார். அவருடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹுமா குரேஷி உள்ளிட்ட பிரபல நடிகர்கள் என இப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவானது. இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
3/5
டாக்ஸிக்
இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 26) புதன்கிழமை திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களும் பலரும் தியேட்டருக்கு சென்று பார்த்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என்று கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.
4/5
டாக்ஸிக்
இருப்பினும், படத்தின் மேல் இருந்த எதிர்ப்பார்ப்பின் காரணமாக இதுவரை நல்ல கலெக்ஷனை பெற்றுள்ளது. இதுவரை மட்டும் சுமார் ரூ. 150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5/5
டாக்ஸிக்
டாக்ஸிக் திரைப்படம் சுமார் 500 ரூபாய் கோடி பட்ஜெட்டில் உருவாக்கி உள்ள நிலையில், வரும் நாட்களில் படத்தின் வசூல் அதனை எட்டுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.