Trichy government jobs : திருச்சி மாவட்டத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு விவரம்
Trichy government jobs : திருச்சி மாவட்டத்தில் ஒப்பந்த வேலைவாய்ப்புக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
1/5
புதிய வேலைவாய்ப்பு
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய வேலைவாய்ப்பு - திருச்சிராப்பள்ளி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் காலியாக உள்ள 'தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரத்திக் தாயள் வெளியிட்டுள்ளார். முழுக்க முழுக்க ஒப்பந்த அடிப்படையில் ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
2/5
கல்வித் தகுதி
கல்வித் தகுதி மற்றும் முன் அனுபவம் - இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் உயிரியல், சுற்றுச்சூழல் அறிவியல், சூழலியல், வனவியல், வனவிலங்கு அல்லது பொதுக் கொள்கை உள்ளிட்ட துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 1 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
3/5
வயது வரம்பு
வயது வரம்பு மற்றும் பிற தகுதிகள் - விண்ணப்பதாரர்கள் 01.10.2026 அன்று அதிகபட்சம் 40 வயதிற்குட்பட்டவர்களாகவும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்களுக்குத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படைத் தட்டச்சு அறிவு இருப்பது அவசியம்.
4/5
தேர்வு செய்யப்படும் முறை
தேர்வு செய்யப்படும் முறை - தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்ட பிறகு, நேர்காணல் மற்றும் தட்டச்சுத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
5/5
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசித் தேதி - விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களை இணைத்து, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நேரடியாகவோ அல்லது trichydrda@gamil.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ 27.11.2026 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.