• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /சம்மதமின்றி LPG இணைப்பு முடக்கம்: திருச்சி திருவெறும்பூர் மக்கள் கொந்தளிப்பு - பின்னணி

சம்மதமின்றி LPG இணைப்பு முடக்கம்: திருச்சி திருவெறும்பூர் மக்கள் கொந்தளிப்பு - பின்னணி

Written ByKarthikeyan Sekar
Published: Nov 15, 2026, 16:41 IST|Updated: Nov 15, 2026, 16:51 IST
joinshare
Trichy LPG News : திருச்சியில் குழாய் எரிவாயு இணைப்புக்காக 200-க்கும் மேற்பட்ட வீடுகளின் சிலிண்டர் இணைப்பு அதிரடி முடக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி

Trichy LPG News : திருச்சியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளின் சிலிண்டர் இணைப்பு அதிரடியாக முடக்கப்பட்டுள்ளது குறித்த முழு விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
 

Trichy LPG News1/5

சமையல் எரிவாயு இணைப்புகள்

1. சம்மதமின்றி முடக்கப்பட்ட சமையல் எரிவாயு இணைப்புகள்- திருச்சி திருவெறும்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்களின் சமையல் எரிவாயு இணைப்புகள், அவர்களின் முன் அனுமதியின்றியே திடீரென முடக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 200 முதல் 250 குடும்பங்கள் வரை புதிய சிலிண்டர்களை முன்பதிவு செய்ய முடியாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக பாலாஜி நகர், கைலாஷ் நகர், பிரகாஷ் நகர், காட்டூர் மற்றும் வின் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Trichy LPG News2/5

குழாய் எரிவாயு திட்டத்திற்கு மாற நிர்பந்தமா?

2. குழாய் எரிவாயு திட்டத்திற்கு மாற நிர்பந்தமா? - தனியார் நிறுவனம் மூலம் வழங்கப்படும் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்புக்கு மக்களைக் கட்டாயப்படுத்தி மாற்றும் நோக்கிலேயே, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 'ஒரு வீட்டிற்கு ஒரு இணைப்பு' என்ற கொள்கையின் அடிப்படையில், PNG இணைப்பைப் பெற வேண்டுமென்றால் பழைய LPG இணைப்பை ஒப்படைக்க வேண்டும் எனவும், இல்லையெனில் இணைப்புகள் முடக்கப்படும் எனவும் அண்மையில் கூட்டு நோட்டீஸ் மூலம் எச்சரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Trichy LPG News3/5

பொதுமக்கள் கேள்வி

3. பணியிட மாற்றம் ஏற்பட்டால் என்ன செய்வது? பொதுமக்கள் கேள்வி - எண்ணெய் நிறுவனங்களின் இந்த நடவடிக்கையைக் கண்டித்துள்ள திருச்சி பால்பண்ணை - துவாக்குடி அணுகுசாலை மீட்பு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கே.ராஜேந்திரன், "தமிழகத்தின் பல பகுதிகளில் இன்னும் PNG வசதி வரவில்லை, இந்நிலையில் பணியிட மாற்றம் காரணமாகப் வேறு ஊர்களுக்கோ அல்லது கிராமங்களுக்கோ செல்ல நேரிட்டால், LPG இணைப்பு இல்லாமல் மக்கள் எப்படிச் சமாளிப்பார்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். நுகர்வோரின் சம்மதமின்றி இணைப்புகளை முடக்குவது சட்டப்படி குற்றம் என்றும் அவர் சாடியுள்ளார்.
Trichy LPG News4/5

தனியார் நிறுவனத்தின் ரியாக்ஷன்

4. மத்திய அரசின் உத்தரவைச் சுட்டிக்காட்டும் தனியார் நிறுவனம் - இதனிடையே, வீட்டு உபயோக சிலிண்டர் இணைப்புகள் முடக்கப்பட்டதற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் திருச்சியில் PNG சேவையை வழங்கும் தனியார் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், "PNG குழாய் வசதி செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், வீட்டு உபயோக LPG சிலிண்டர்களை வாங்க முடியாது என இந்திய அரசாங்கமே உத்தரவு பிறப்பித்துள்ளது" என்று அந்நிறுவனத்தின் பிரதிநிதி விளக்கமளித்துள்ளார்.
Trichy LPG News5/5

LPG விநியோகஸ்தர்கள்

5. கைவிரிக்கும் LPG விநியோகஸ்தர்கள் - தீர்வு எப்போது? - மறுபுறம், தங்களால் இந்த இணைப்புகள் முடக்கப்படவில்லை எனத் திருவெறும்பூர் பகுதி LPG விநியோகஸ்தர்களும் கைவிரித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக இந்தப் பிரச்சனை நீடித்து வருவதாகவும், யார் இந்த இணைப்புகளை முடக்கினார்கள் என்பது தங்களுக்குத் தெரியாது எனவும் கூறியுள்ள விநியோகஸ்தர்கள், தங்கள் அதிகார வரம்பிற்குள் முடக்கப்பட்ட இணைப்புகளை மீண்டும் செயல்படுத்த (Unblock) முடியாது எனத் தெரிவித்துள்ளதால் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
TAGS:
Tamil Nadu

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.