Tiruvannamalai Temple TTDC Tour: கார்த்திகை மகா தீபம் நவம்பர் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஒருநாள் சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கம்மி கட்டணத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசனம் செய்யலாம்.
Tiruvannamalai Temple TTDC Tour: திருவண்ணாமலை கோயில் தரிசன சுற்றுலாவுக்கான கட்டணம் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
1/5
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். இதனால் அண்ணாமலையாரை தரிசிக்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதுவும் விசேஷ தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
2/5
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபம்
திருவண்ணாமலை அண்ணமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 24ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. நவம்பர் 23ஆம் தேதி இரவு முதல் நவம்பர் 24 இரவு வரை பௌர்ணமி மற்றும் தீபத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். அதையடுத்து நவம்பர் 24ஆம் தேதி காலை பரணி தீபம் ஏற்றப்பட்டு, நவம்பர் 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு அண்ணாமலை மலையின் உச்சத்தில் தீபம் ஏற்றப்பட உள்ளது.
3/5
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ஒருநாள் சுற்றுலா
இந்த நிலையில், இந்த நேரத்தில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் திருவண்ணாமலைக்கு சுற்றுலா திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ஒருநாள் சுற்றுலா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 7.30 மணிக்கு சென்னையில் இருநது புறப்பட்டு, மதியம் 12.30 மணியளவில் திருவண்ணாமலைக்கு சென்றடைவீர்கள். தொடர்ந்து, கிரிவலம் மேற்கொள்வீர்கள். அதனை முடித்துவிட்டு, தரிசனம் மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. ஆனால், தரிசனம் தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை.
4/5
திருவண்ணாமலை சுற்றுலா கட்டணம் எவ்வளவு?
இதற்கான கட்டணமாக ரூ1,100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்து மூலம் சென்றடைவீர்கள். இந்த பேருந்தில் 18 ஏசி இருக்கைகள் இருக்கும். எனவே, கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்ல விருப்பப்படுபவர்கள் உடனே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுங்கள் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
5/5
டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டியது எப்படி?
திருவண்ணாமலை கிரிவலம் செல்ல விருப்பப்படுபவர்கள் ttdcbooking.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 4253 1111/ 044 25333333/ 7550063121 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், sales@ttdconline.com என்ற இமெயில் ஐடி மூலம் உங்களுக்கு தேவையான தகவல்களை கேட்டு அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.