UPI Merchant Charges Latest: யுபிஐ பரிவர்த்தனைக்கான கட்டண வசூல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு, யுபிஐ பரிவர்த்தனைக்கான கட்டண வசூல் அமல்படுத்தப்படும் என்றும் அதிரடி அறிவிப்பு வெளியாக உள்ளது.
UPI Merchant Charges Latest: ரூ.2,000க்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைக்கு அறிவிக்கப்பட்ட கட்டண வசூல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதனால், வணிகர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.
1/5
யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம்
இந்தியாவில் யுபிஐ மூலமாக ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை நடப்பது அதிகமாகவிட்டது. சிறுசிறு கடைகள் மூலம் வணிக வளாகங்கள் வரை அனைத்து இடங்களிலும் மக்கள் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இதுவரை யுபிஐ பரிவர்த்தனைக்கு எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்பட்டது இல்லை. ஆனால், ரூ.2000க்கு மேல் யுபிஐ வணிகப் பரிவர்த்தனைக்கு 0.4 சதவீதம் வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டது.
2/5
ரூ.2,000க்கு மேல் பரிவர்த்தனைக்கு எம்டிஆர் கட்டணம்
ரூ.5,000 பரிவர்த்தனைக்கு ரூ.20, ரூ.50,000 பரிவர்த்தனைக்கு ரூ.200 என எம்டிஆர் கட்டமணாக செலுத்த வேண்டும். மேலும் 75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு, ஒரு பரிவர்த்தனைக்கு MDR ரூ. 300 ஆக உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும். இந்த எம்டிஆர் கட்டணம் மக்கள் செலுத்தவில்லை. வணிகர்கள் மட்டுமே இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த எம்டிஆர் கட்டண நடைமுறை அக்டோபர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) அறிவிப்பை வெளியிட்டது.
3/5
யுபிஐ எம்டிஆர் கட்டணம் அமல்படுத்துவது ஒத்திவைப்பு
ஆனால், யுபிஐ கட்டண வசூல் அமல்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பண்டிகை காலம் மற்றும் தீபாவளியை கருத்தில் கொண்டு, இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் ஒத்திவைத்துள்ளது. யுபிஐ எம்.டி.ஆர் கட்டணங்கள் அமல்படுத்தப்படும் திருத்தப்பட்ட தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அதிகளவில் ஷாப்பிங் செய்வார்கள்.
4/5
யுபிஐ கட்டணம் தள்ளிவைப்புக்கு காரணம் என்ன?
இந்த சூழலில், எம்டிஆர் கட்டணத்தால் வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து NPCI கூறியது, “பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபர்-வணிகர் (P2M) யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR), தீபாவளிக்குப் பிறகு வேறொரு தேதியில் அமல்படுத்தப்படும்” என தெரிவித்தது. இதனால், வணிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
5/5
யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் எப்பாது அமல்?
நாடு முழுவதும் சுமார் 10 கோடி வணிகர்கள் யுபிஐ பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொள்கின்றனர். இவர்களில் சிறு நகரங்கள் முதல் கிராமப்புறங்கள் வரையிலான வணிகர்களும் அடங்குவர். இந்த பண்டிகை காலங்களில் எம்டிஆர் கட்டணத்தை விதிக்கக் கூடாது எனவும், இதனால் தங்கள் வியாபாரம் பாதிக்கக் கூடும் என்றும் அவர் கூறியிருந்தனர். இதனை அடுத்து, மத்திய அரசு யுபிஐ எம்டிஆர் கட்டணத்தை அமல்படுத்துவதை ஒத்திவைத்து இருக்கிறது.