Home Loan EMI Tips: ரெப்போ விகித உயர்வால் கடன் பெறுவதற்கான செலவு அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்காகும் செலவு அதிகரித்தால், வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கான கடன் வட்டி அளவை அதிகரிக்கும். இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.
RBI Repo Rate: ரெப்போ விகிதத்தை 5.25 சதவீதத்திலிருந்து 5.5 சதவீதமாக உயர்த்தும் இந்த முடிவு, ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான பணவியல் கொள்கைக் குழுவால் (MPC) ஒருமனதாக எடுக்கப்பட்டது. பணவீக்கம் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு ஆகிய சூழல்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
RBI on Fixed Deposits: நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களை நிர்வகிக்கும் கட்டமைப்பை RBI மாற்றியமைக்க உள்ளது. இதற்கான புதிய விதிமுறைகள் அக்டோபர் 1, 2026 முதல் அமலுக்கு வருகின்றன.
அக்டோபர் 15ஆம் தேதி, புதிய வணிகர் தள்ளுபடி விகிதம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதற்கு எதிராக, வர்த்தகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக, வரும் அக்டோபர் 2ஆம் தேதி, UPI இல்லாத தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
RBI ரெப்போ ரேட்டை எதிர்காலத்தில் உயர்த்தக்கூடும் என SBI ஆய்வு அறிக்கை மதிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தலா 0.25% வரை உயர்வு ஏற்பட்டால், மொத்தமாக 0.50% வரை ரெப்போ ரேட் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதனால் Floating Rate கடன்களின் வட்டி மற்றும் EMI அதிகரிக்கலாம். மறுபுறம், FD வட்டி விகிதங்கள் உயர்ந்தால் சேமிப்பாளர்களுக்கு சாதகமாக இருக்கலாம்.
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI)மற்றும் ரிசர்வ் வங்கி, ஒரு சில பிரிவுகளுக்கு UPI பணப்பரிவர்த்தனை உச்சவரம்பை உயர்த்தியுள்ளது. இது யாருக்கெல்லாம் பொருந்தும் என்பது குறித்தும், இதனால் பயனடைபவர்கள் யார் என்பது குறித்தும் இங்கு தெரிந்து கொள்வோம்.
SBI New Rules : எஸ்பிஐ வங்கி, அக்டோபர் 1 முதல் பணம் எடுக்கும் விதிகளில் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Plastic Currency Notes: வழக்கமான காகித நோட்டுகளுக்கு மாற்றாக, அதிக நீடித்து உழைக்கக்கூடிய மற்றும் பாதுகாப்பான ஒரு முறையைச் சோதிக்கும் முன்னோடித் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2027-28 நிதியாண்டு முதல் பாலிமர் (பிளாஸ்டிக்) ரூபாய் தாள்களை அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தயாராகி வருகிறது.
Gratuity Calculator: ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகளாக அயராது உழைத்த பிறகு, வேலையை விட்டு விலகும்போதோ அல்லது ஓய்வுபெறும்போதோ நமக்குக் கிடைக்கும் வெகுமதிதான் கிராச்சுவிட்டி (Gratuity) எனப்படும் பணிக்கொடை. கிராஜுவிட்டி தொகை எப்படி கணக்கிடப்படுகின்றது? யாருக்கு எவ்வளவு கிராஜுவிட்டி கிடைக்கும் என இந்த பதிவில் காணலாம்.
10 மற்றும் 20 ரூபாய் பாலிமர் நோட்டுகளின் கள சோதனைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தற்போது புழக்கத்தில் உள்ள காகித நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் அவை திரும்பப் பெறப்படாது என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. பாதுகாப்பு சோதனைகள் முடிந்த பிறகே புதிய பாலிமர் நோட்டுகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும்.