Uttar Pradesh Assembly Election: 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பெண் வாக்காளர்களை மையமாகக் கொண்ட அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. பெண்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ரூ. 20,000-ஐச் செலுத்தும் திட்டமொன்றை பாஜக அரசு பரிசீலித்து வருகிறது.
Uttar Pradesh Assembly Election: தகுதியுள்ள பெண்களுக்கு மொத்தம் ரூ. 20,000 தொகையை, தலா ரூ. 10,000 வீதம் இரண்டு தவணைகளாக வழங்க இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. முதல் தவணை டிசம்பர் மாதத்தில் வழங்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது குறித்து அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
1/8
உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தல்
2027 ஆம் ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல்கள் நடக்கவுள்ளன. பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறுவதற்கன பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. இந்த தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சி ஒரு முக்கிய வியூகத்தை வகுத்துள்ளது.
2/8
பெண்களுக்கான நிதி உதவித் திட்டம்
பாஜக குறிப்பாக பெண்களுக்கான வாக்குகளை முழுமையாக பெறும் நோக்கில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் நிதி உதவித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த அக்கட்சி பரிசீலித்து வருகிறது. உத்தர பிரதேச அரசு, பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா 20,000 ரூபாயைச் செலுத்துவதற்கான திட்டத்தை அமல்படுத்தக்குடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
3/8
உத்தர பிரதேச அரசு
உத்தர பிரதேச அரசின் இந்தத் திட்டம் தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. இதற்கு அனுமதி கிடைத்தால், வரவிருக்கும் குளிர்காலக் கூட்டத்தொடரின் போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு இதனைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, அதற்கான நிதி ஒதுக்கீட்டை ஏற்பாடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அரசு அதிகாரிகளும் கட்சி நிர்வாகிகளும் ஏற்கனவே ஆலோசனைகளை நடத்தியுள்ளனர்.
4/8
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நடத்தும் மக்கள் சந்திப்புகள்
2017-ஆம் ஆண்டு முதல் உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாஜக, இப்போது மூன்றாவது முறையாக வெற்றி பெறத் திட்டமிட்டுள்ளது. பெண்களுக்கான இந்த நிதி பரிமாற்றத் திட்டம் குறித்த ஆலோசனைகள் கட்சிக்குள் தீவிரமடைந்துள்ளன. திங்கள்கிழமை நடைபெற்ற முக்கியக் கூட்டத்தில், மத்திய மற்றும் மாநிலத் தலைவர்கள் பங்கேற்று, மூத்த நிர்வாகிகளுக்குப் பல்வேறு பொறுப்புகளை வழங்கினர்.
5/8
தொகுதிகளில் கூட்டங்களை நடத்தத் திட்டம்
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs), சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) மற்றும் மேலவை உறுப்பினர்கள் (MLCs) தங்கள் தொகுதிகளில் மக்கள் சந்திப்புகளை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் டிசம்பர் 5-ஆம் தேதிக்குள் குறைந்தது 10 கூட்டங்களை நடத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
6/8
பலவீனமான தொகுதிகளைக் கண்காணிக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள்
பாஜகவின் வெற்றி வாய்ப்பு சற்று குறைவாகக் கருதப்படும் தொகுதிகளைக் கண்காணிக்கும் பொறுப்பு, மாநிலங்களவை உறுப்பினர்களிடம் (Rajya Sabha MPs) ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் அவர்கள் வாக்காளர்களையும் கட்சித் தொண்டர்களையும் சந்தித்து உரையாடுவார்கள்.
7/8
டிசம்பர் 5-ஆம் தேதிக்குள் 50 கூட்டங்கள்
மேலும், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் டிசம்பர் 5-ஆம் தேதிக்குள் 50 கூட்டங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே கட்சியின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் அதிகப்படியான மக்களைச் சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது.
8/8
பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பிரச்சாரம்
பாரதிய ஜனதா கட்சி தற்போது அடிமட்ட அளவில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் இந்த நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கட்சியின் மூத்த தலைவர்கள் உத்தரப் பிரதேசத்திற்கு மேற்கொள்ளும் பயணங்களும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது.