Varalakshmi Vratham Puja: வரலட்சுமி விரதம் நாளை (ஆகஸ்ட் 20) கடைபிடிக்கப்படும் நிலையில், எப்படி மகாலட்சுமியை வைத்து பூஜை செய்யலாம், பூஜை செய்ய உகந்த நேரம் என்பது குறித்து பார்ப்போம்.
Varalakshmi Vratham Puja: “வரம் தரும் லட்சுமி – வரலட்சுமி” என்ற அடிப்படையில், மகாலட்சுமியை பக்தியுடன் வழிபட்டு, விரதம் இருப்பது இல்லத்தில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது நம்பிக்கை.
1/5
வரலட்சுமி விரதம்
வரலட்சுமி விரதம் திருமணமான பெண்கள், தங்களின் கணவரின் ஆயுள் நீட்டிக்க வேண்டும் என்றும் குடும்ப நலனுக்காகவும் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுவது உண்டு. செல்வம் மட்டுமல்லாமல், குடும்பத்தில் மங்களம், வளம், ஆரோக்கியம், நல்ல சந்ததி, நீண்ட ஆயுள், மனநிம்மதி மற்றும் இறை அருள் நிலைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த வகையில், வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
2/5
வரலட்சுமி பூஜை
இந்நாளில் அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து வீட்டைத் தூய்மைப்படுத்தி, பூஜை அறையை அலங்கரித்து, மகாலட்சுமி தேவியை வரவேற்கும் வகையில் கலசம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். கலசத்தில் புனித நீர் நிரப்பி, மஞ்சள், குங்குமம், அக்ஷதை போன்றவற்றைச் சேர்க்க வேண்டும்.
3/5
வழிமுறை
கலசத்தின் மீது தேங்காய் வைத்து, மாவிலை அலங்காரம் செய்து, அம்மனுக்கு பட்டாடை, மலர் மாலை, நகைகள் போன்றவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும். தொடர்ந்து, நைவேத்தியம் சமர்ப்பித்து தீபாராதனை செய்ய வேண்டும்.
4/5
வரலட்சுமி பூஜை வழிபாடு
சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பழம், பிரசாதம் போன்றவற்றை வழங்க வேண்டும். வரலட்சுமி விரதத்தில் நோன்புக் கயிறு அணிவது முக்கியமான வழக்கமாக உள்ளது. மஞ்சள் பூசப்பட்ட புனித நூலை பூஜை செய்து, பெண்கள் தங்கள் கையில் கட்டிக் கொள்ளலாம்.
5/5
வரலட்சுமி பூஜை செய்ய நேரம்
இதுபோன்று பூஜை செய்ய முடியாதவர்கள் மகாலட்சுமியின் படத்திற்கு பூ, சந்தனம், குங்குமம் வைத்து, பால், பழங்களை நெய்வேத்தியமாக படைத்து வழிபடலாம். வரலட்சுமி பூஜை செய்ய காலை 6.23 முதல் 7.48 மணி வரையும், மதியம் 12.06 முதல் மதியம் 2.20 மணி வரையும், மாலை 6.16 மணி முதல் இரவு 7.52 மணி வரையும் பூஜை செய்யலாம். இந்த நேரத்தில் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும் என் ஐதீகம்.