Bairava Re-Release : முதல்வர் விஜய், நடிகராக இருக்கும் போது நடித்த சூப்பர் ஹிட் படமான ‘பைரவா’ ரீ-ரிலீஸ் ஆகிறது; எப்போது தெரியுமா? இதோ முழு தகவல்!
Bairava Re-Release : முதல்வர் விஜய் நடித்த ஹிட் திரைப்படங்களில் ஒன்று, பைரவா. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த படம் குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
பைரவா
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த திரைப்படம்தான் பைரவா. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படம், 2017ஆம் ஆண்டு வெளியானது.
2/5
முதல்வர் விஜய் நடித்த படம்
பைரவா திரைப்படத்தில் விஜய் கடன் வசூலிப்பவராக நடித்திருப்பார். இதில், அவருக்கு வில்லனாக ஜகபதி பாபு நடித்திருக்கிறார். இதில், டேனியல் பாலாஜியும் ஒரு மெயின் வில்லனாக வருவார்.
3/5
தயாரிப்பாளர்கள் யார்
விஜயா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில், பி.வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி.பாரதி ரெட்டி தயாரிப்பில் வந்த பைரவா திரைப்படம் தற்போது ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது. எப்போது தெரியுமா?
4/5
பைரவா ரீ ரிலீஸ்
பைரவா திரைப்படம், 10 ஆண்டுகளுக்கு பிறகு 2027ஆம் ஆண்டு புத்தாண்டை ஒட்டி, ஜனவரி 1ஆம் தேதி மீண்டும் திரையரங்கிற்கு வர இருக்கிறது.
5/5
தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ்
பைரவா திரைப்படத்தை சிம் சினி இண்டர்நேஷனல் எனும் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிட இருக்கிறது.