• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /விநாயகர் சதுர்த்தி: தென் மாவட்ட மக்கள் கவனத்திற்கு... சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி: தென் மாவட்ட மக்கள் கவனத்திற்கு... சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

Written BySudharsan G
Published: Sep 10, 2026, 11:40 PM IST|Updated: Sep 10, 2026, 11:47 PM IST
joinshare
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள் குறித்து விரிவாக இங்கு காணலாம்.

விநாயகர் சதுர்த்தி வரும் செப். 14ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று கொண்டாடப்பட இருக்கிறது. வார இறுதி நாட்களுடன் இணைந்து பண்டிகை தினம் வருவதால் பேருந்து மற்றும் ரயில்களில் அதிகளவில் கூட்டம் கூடும். அநத் வகையில், தெற்கு ரயில்வே தென் மாவட்ட பயணிகளுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

தெற்கு ரயில்வே1/5

எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் முழு விவரம்

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 06151) வரும் செப். 12ஆம் தேதி (சனி) இரவு 11.50 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் (ஞாயிறு) காலை 11.15 மணிக்கு திருநெல்வேலியை அடையும். அதேநேரத்தில், அந்த ரயில் (எண்: 06152)திருநெல்வேலியில் இருந்து செப். 14ஆம் தேதி, அதாவது பிள்ளையார் சதுர்த்தி அன்றிரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் (செப். 15 - செவ்வாய்) சென்னை எழும்பூருக்கு காலை 10.15 மணிக்கு வந்து சேரும். (Image Source : X/@GMSRailway)
தெற்கு ரயில்வே2/5

எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் நிற்கும் இடங்கள்

எழும்பூர் - திருநெல்வேலி இடையே தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். திருநெல்வேலி ஏசி இரண்டாம் டைர் - 1, ஏசி மூன்றாம் டைர் - 2, படுக்கையறை பெட்டிகள் - 14, இரண்டாம் வகுப்பு - 4, இரண்டாம் வகுப்பு (மாற்றுத்திறனாளி) - 2 உள்ளிட்ட பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட இருக்கிறது. செப். 11ஆம் தேதி காலை 8 மணிக்கு இந்த சிறப்பு ரயிலின் முன்பதிவு தொடங்குகிறது. (Image Source : X/@GMSRailway)
தெற்கு ரயில்வே3/5

பெங்களூரு - திருநெல்வேலி சிறப்பு ரயில் புறப்படும் நேரம்

கேஎஸ்ஆர் பெங்களூரு - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்: 06527) வரும் செப். 11ஆம் தேதி இரவு 11.35 மணிக்கு கேஎஸ்ஆர் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் (செப். 12) மதியம் 1.15 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். தொடர்ந்து திருநெல்வேலியில் இருந்து செப். 12ஆம் தேதி மதியம் 3.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (எண்: 06528) செப். 13ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு பெங்களுரு கண்டோன்மென்ட் வந்தடையும். (Image Source : X/@GMSRailway)
தெற்கு ரயில்வே4/5

பெங்களூரு - திருநெல்வேலி சிறப்பு ரயில் எங்கெல்லாம் நிற்கும்?

கேஎஸ்ஆர் பெங்களூரு - திருநெல்வேலி இடையே பெங்களூரு கண்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ஏசி இரண்டாம் டைர் - 1, ஏசி மூன்றாம் டைர் - 3, படுக்கையறை பெட்டிகள் - 10, இரண்டாம் வகுப்பு - 4, இரண்டாம் வகுப்பு (மாற்றுத்திறனாளி) - 2 உள்ளிட்ட பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட இருக்கிறது. முன்பதிவும் விரைவில் தொடங்கும். (Image Source : X/@GMSRailway)
தெற்கு ரயில்வே5/5

தாம்பரம் - தென்காசி சிறப்பு ரயில்

தாம்பரம் - தென்காசி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 06089) தாம்பரத்தில் இருந்து செப். 11ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, செப். 12ஆம் தேதி காலை 6.15 மணிக்கு தென்காசி வந்தடையும். செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வரை செல்கிறது. செங்கோட்டை - தாம்பரம் ரயில் (எண்: 06090) செப். 14ஆம் தேதி மதியம் 3 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு செப். 15ஆம் தேதி தாம்பரம் வந்தடையும். (Image Source : X/@GMSRailway)
TAGS:
Southern Railway

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.