Actor Vishal : டைரக்டர் விஷால் இனி நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கிறாராம். அடுத்தப் பட அப்டேடும் வந்தாச்சு.
Actor Vishal : நடிகர் விஷால் அடுத்த படத்துக்காக பிரபல இயக்குநருடன் கரம் கோர்க்க உள்ளார். இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
1/7
முன்னணி நடிகர் விஷால்:
முன்னணி நடிகர் விஷால்: தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கதாநாயகனாக வலம் வரும் விஷால், செல்லமே, சண்டக்கோழி, தாமிரபரணி, இரும்புத்திரை எனப் பல வெற்றித் திரைப்படங்களைக் கொடுத்து முன்னணி நடிகராகத் திகழ்கிறார்.
2/7
அடுத்தடுத்த தோல்வி:
அடுத்தடுத்த தோல்வி: கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான 'மார்க் ஆண்டனி' மாபெரும் வெற்றியைப் பெற்ற நிலையில், அதன் பிறகு வெளியான படங்கள் விஷாலுக்கு எதிர்பார்த்த வரவேற்பைப் பெற்றுத்தரவில்லை.
3/7
இயக்குனராக பின்னடைவு:
இயக்குனராக பின்னடைவு: விஷால் இயக்கி, கதாநாயகனாக நடித்த 'மகுடம்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியைச் சந்தித்தது அவருக்குத் திரைத்துறையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
4/7
நடிப்பில் மட்டுமே கவனம்:
நடிப்பில் மட்டுமே கவனம்: மகுடம் படம் கொடுத்த எதிர்பாராத சறுக்கலைத் தொடர்ந்து, இயக்கத்தில் இருந்து விலகி இனி நடிப்பில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த விஷால் உறுதியான முடிவெடுத்துள்ளார்.
5/7
வெற்றிப் பட இயக்குனருடன் கூட்டணி:
வெற்றிப் பட இயக்குனருடன் கூட்டணி: இந்தச் சூழலில், எதிர்நீச்சல், கொடி, கருடன், லீடர் உள்ளிட்ட தொடர் வெற்றிப் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் விஷால் அடுத்ததாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
6/7
மாஸ்டர் தயாரிப்பாளர்:
மாஸ்டர் தயாரிப்பாளர்: தளபதி விஜய்யின் மாஸ்டர் மற்றும் லியோ படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் லலித் குமார், விஷால் – துரை செந்தில்குமார் இணையும் இந்தப் புதிய பிரம்மாண்டப் படத்தைத் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
7/7
உச்சக்கட்ட எதிர்பார்ப்பு
உச்சக்கட்ட எதிர்பார்ப்பு: தொடர் கமர்ஷியல் ஹிட் படங்களை இயக்கிய துரை செந்தில்குமாருடன் விஷால் முதன்முறையாக இணைவது, அவரது ரசிகர்களிடையே கம்பேக் வெற்றிக்கான பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.