Dorothy Name Meaning : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘டோரதி’ திரைப்படம், மக்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியிருக்கும் நிலையில், இந்த படத்தின் பெயரின் அர்த்தம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
Dorothy Name Meaning : கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம், டோரதி. இந்த படத்திற்கு விமர்சனங்கள் நல்ல முறையில் வந்திருந்தாலும், LGBTQ+ மக்களுக்கு எதிராக இருக்கும் பலர், இது குறித்து வைக்கும் கருத்துகள், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த சமயத்தில், இந்த படத்தின் பெயருடைய அர்த்தம் என்னவென்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
Dorothy Movie Cast And Crew
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம், ‘டோரதி’. இந்த படத்தில், ரிஷிகாந்த், சனத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம்தான், தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பிய படமாக இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
2/5
Dorothy Movie Plot
1990களில், மதுரையில் இருக்கும் ஒரு கிராமத்தில் நடப்பது போல கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், ஹீரோ-ஹீரோயின், வில்லன், வில்லனின் அடியாள் என எல்லாமே சமூகம்தான் என்பதை அழகாக காண்பித்துள்ளனர்.
3/5
Dorothy Movie Name Meaning
டோரதி படத்தில், கீர்த்தி சுரேஷின் உண்மையான பெயர் வேறு ஒன்று. அந்த பெயர் என்னவென்றே சொல்ல மாட்டார்கள். ஆனால், அவருக்கு அதில் செல்ல பெயர், ‘டோரதி’ என்று வைக்கப்பட்டிருக்கும். இந்த பெயருக்கும், படத்தின் கதைக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. Dorothy என்றால் ’கடவுளின் பரிசு’ என்று அர்த்தம். இது, கிரேக்க மொழியில் இருந்து நிறுவப்பட்ட வார்த்தை என கூறப்படுகிறது. Doran என்றால் Gift-பரிசு, Theos என்றால் God-கடவுள்.
4/5
Dorothy Name Meaning
இந்த இரண்டையும் சேர்த்தால் God's Gift அதாவது கடவுளின் பரிசு என்று புலப்படும். இதனை, 15ஆம் நூற்றாண்டில் இருந்து இங்கிலாந்தில் உபயோகித்து வருகின்றனர். 1904க்கு மேல் அமெரிக்காவிலும் அதிகம் பேர் உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர்.
5/5
Dorothy Is Keerthy Suresh An Angel
டோரதி படத்தில், ஒரு திருநங்கை கதாப்பாத்திரம் வரும், அவளுக்கும் டோரதி என பெயர் வைக்கப்படும், இதற்கு அர்த்தம் ‘கடவுளின் பரிசு’ என்பது. அதே சமயத்தில், கீர்த்தி சுரேஷின் கதாப்பத்திரம் இப்படத்தில் ஒரு தேவதைக்கு சமமாக பார்க்கப்படுகிறது. தேவதை என்பவர் இறை தூதுவர் என்பதால், அவருக்கும் இந்த பெயர் கச்சிதமாக பொருந்துகிறது.