• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /திருமணத்தை நிறுத்தியது ஏன்? நடிகை திரிஷா பழைய பேட்டியில் சொன்ன காரணம்

திருமணத்தை நிறுத்தியது ஏன்? நடிகை திரிஷா பழைய பேட்டியில் சொன்ன காரணம்

Written ByKarthikeyan Sekar
Published: Aug 17, 2026, 06:01 PM IST|Updated: Aug 17, 2026, 06:06 PM IST
joinshare
Trisha Latest News : நடிகை திரிஷா தன்னுடைய திருமணத்தை நிறுத்தியது ஏன்? என அவரே சொன்ன காரணம் பழைய பேட்டி இப்போது வைரல்

Trisha Latest News : நடிகை திரிஷா திருமணத்தை நிறுத்தியது குறித்து பேட்டி ஒன்றில் அவரே சொன்ன காரணத்தை இங்கே விரிவாக பார்க்கலாம். 
 

Trisha interview1/8

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகி

2002 ஆம் ஆண்டில் மௌனம் பேசியதே படம் மூலம் அறிமுகமாகி கில்லி மூலம் தனக்கென தனி முத்திரை பதித்தவர் த்ரிஷா. தற்போது 42 வயதாகும் இவர், பல விருதுகளை வென்று இன்றும் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான தக் லைஃப் படத்தைத் தொடர்ந்து, லேட்டஸ்டாக அவரது நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம் செம ஹிட் அடித்தது.
Trisha old interview2/8

வைரலாகும் திருமண நிச்சயதார்த்தப் பேட்டி

பல ஆண்டுகளாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் த்ரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏற்கனவே ஒருமுறை அவருடைய திருமணம் ஒருமுறை நின்றுபோய் இருக்கிறது. அந்த திருமணம் ஏன் நின்றது என்பது குறித்து அவர் அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.
Trisha Marriage Update3/8

திருமண ஏற்பாடு

கடந்த 2015-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வருண் மணியன் என்பவருடன் த்ரிஷாவுக்கு அதிகாரப்பூர்வமாக நிச்சயதார்த்தம் நடந்தது. கமலுடன் 'தூங்காவனம்' படத்தில் நடித்துக்கொண்டிருந்த அந்த சமயத்தில் நிகழ்ந்த இந்த நிச்சயதார்த்தம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
Tamil Cinema news4/8

திடீரென நின்ற திருமணம்

கோலாகலமாக நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், அடுத்த 5 மாதங்களிலேயே திருமணம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் இருவரின் திருமணம் நின்றதற்கான காரணம் குறித்து பல வதந்திகளும் ஊகங்களும் இணையத்தில் பரவி வந்தன. இந்நிலையில், அந்த திருமண முறிவுக்கான உண்மையான காரணத்தை த்ரிஷாவே நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
Actress Trisha News5/8

நடிப்பை நிறுத்தச் சொன்ன குடும்பம்

திருமணம் நின்றது குறித்து பேசிய த்ரிஷா, தன்னை திருமணம் செய்துகொள்ள இருந்த நபர் சினிமாவில் நடிப்பதை முழுமையாக நிறுத்தும்படி கேட்டதாகக் குறிப்பிட்டார். திரைத்துறை மீது கொண்ட அளப்பரிய காதலால், நடிப்பு மற்றும் திருமணம் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் அவருக்கு உருவானது. கலை உலகை விட்டு விலகுவதை விட, திருமண முடிவையே கைவிடுவது சிறந்தது என முடிவெடுத்து அந்த திருமணத்தை நிறுத்தியதாக அவர் கூறினார்.
Trisha latest news6/8

கடைசி மூச்சு வரை சினிமா

"நான் கர்ப்பமானால் மட்டுமே தற்காலிகமாக நடிப்பதை நிறுத்துவேன்; மற்றபடி எந்த காரணத்திற்காகவும் சினிமாவிலிருந்து விலக மாட்டேன்" என உறுதியாகக் கூறினார். முன்னணி கதாநாயகி வாய்ப்புகள் குறைந்தாலும், தனது வயதுக்கும் திறமைக்கும் பொருந்தும் அழுத்தமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றார். தனது கடைசி மூச்சு இருக்கும் வரை சினிமாவில் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருப்பேன் என்பதை அந்த பேட்டியில் ஆணித்தரமாகப் பதிவு செய்தார்.
Trisha Marriage Update7/8

விவாகரத்து மீதான பார்வை

திருமண வாழ்க்கை குறித்து பேசிய அவர், தனக்கு எப்போதுமே விவாகரத்து மீது துளியும் நம்பிக்கை கிடையாது என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். இருவருக்குள் புரிதல் இல்லாமல் இன்னொருவரை காயப்படுத்தி வாழும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை தான் ஒருபோதும் விரும்பவில்லை என்றார். எனவே தான், அவசரப்பட்டு முடிவெடுக்காமல் திருமணத்திற்கு முன்பே நூறு முறை யோசித்து செயல்படுவதாக த்ரிஷா அழுத்தமாகக் கூறினார்.
Trisha Marriage News8/8

சினிமா மீதான அர்ப்பணிப்பு

சொந்த வாழ்க்கையின் தனிப்பட்ட விருப்பங்களை விட சினிமா மீதான காதலுக்கே த்ரிஷா முன்னுரிமை அளித்தார் என்பதை இந்த பேட்டி காட்டுகிறது. அவரது இந்த துணிச்சலான முடிவும், திரையுலக அர்ப்பணிப்பும் தான் இன்றும் அவரை உச்ச நட்சத்திரமாக நிலைநிறுத்தியுள்ளது. தற்போது இணையத்தில் மீண்டும் பகிரப்பட்டு வரும் த்ரிஷாவின் இந்த தைரியமான பேச்சுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

2

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

3

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

4

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

5

SA vs AUS: 8 ஆண்டுகளுக்கு பின் மோதல்... காயம்பட்ட ஆஸ்திரேலியா; திடமான தென்னாப்பிரிக்கா

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.