• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /கழட்டிவிடப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட்... பிளேயிங் 11-ல் இடமில்லை - காரணம் என்ன?

கழட்டிவிடப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட்... பிளேயிங் 11-ல் இடமில்லை - காரணம் என்ன?

Written BySudharsan G
Published: Nov 26, 2026, 19:20 IST|Updated: Nov 26, 2026, 19:25 IST
joinshare
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பிளேயிங் 11-ல் இடம்பெறவில்லை. அவருக்கு வாய்ப்பளிக்காதது ஏன்...? என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.

மகாராஷ்டிரா அணி ஆந்திராவுக்கு எதிராக இன்று விளையாடி தோல்வியடைந்தது. மகாராஷ்டிரா தொடரில் இருந்தும் முன்னரே வெளியேறிவிட்டது. ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் பார்ம் தொடர்ச்சியாக மோசமான நிலையிலேயே இருந்து வருவதும் கவனிக்கத்தக்கது.

Ruturaj Gaikwad1/5

சூப்பர் லீக் சுற்றுக்கு போன 8 அணிகள்

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் கடைசி சுற்று லீக் போட்டிகள் இன்று நடைபெற்றன. அடுத்த சூப்பர் லீக் சுற்றுக்கு இதுவரை பரோடா, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், ஆந்திரா, கேரளா, மும்பை, விதர்பா உள்ளிட்ட அணிகள் தகுதிபெற்றுள்ளன.
Ruturaj Gaikwad2/5

ருதுராஜ் கெய்க்வாட் பிளேயிங் 11ல் இல்லை

இந்தச் சூழலில், குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள மகாராஷ்டிரா அணி ஏற்கெனவே குரூப் சுற்றுடன் வெளியேறிவிட்டது. அந்த வகையில், மகாராஷ்டிரா - ஆந்திரா இடையேயான இன்றைய கடைசி லீக் போட்டி மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா பிசிஏ மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேப்டனும், மூத்த வீரருமான ருதுராஜ் கெய்க்வாட் கழட்டிவிடப்பட்டார். குறிப்பாக, ராகுல் திரிபாதி விடுவிக்கப்பட்டார். கேப்டனாக பிருத்வி ஷா செயல்பட்டார்.
Ruturaj Gaikwad3/5

நம்பர் 4 வீரராக ருதுராஜ் கெய்க்வாட்

கடைசி போட்டியை ஆந்திரா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் மகாராஷ்டிரா லீக் சுற்றில் 7 போட்டிகளில் 3இல் வென்று, 4 தோல்விகளை சந்தித்தது. 12 புள்ளிகளுடன் சி பிரிவில் 6வது இடத்தில் நிறைவு செய்தது. இத்தொடரில் முதல் மூன்று போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் விளையாடவில்லை. அடுத்த மூன்று போட்டிகளில் 44*, 14, 4 என 62 ரன்களை அடித்துள்ளார். நம்பர் 4 வீரராக களமிறங்கி விளையாடினார். வழக்கமாக ஓபனிங் அல்லது ஒன்-டவுனில் ருதுராஜ் விளையாடி வந்தார்.
Ruturaj Gaikwad4/5

ருதுராஜ் கெய்க்வாட் கழட்டிவிடப்பட்டாரா?

இந்நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் பிளேயிங் லெவனில் இருந்து கழட்டிவிடப்பட்டது ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவரை அணியில் இருந்து நீக்கவில்லை என்றும் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது என்றும் மகாராஷ்டிரா அணி தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளதாக IANS செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்டதாலும், தொடர்ச்சியாக ருதுராஜ் விளையாடி வருவதாலும் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ruturaj Gaikwad5/5

சுமாரான பார்மில் ருதுராஜ்

ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் பார்ம் கடந்த சில மாதங்களாகவே சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. ருதுராஜ் கெய்க்வாட் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு ஓடிஐ போட்டிகளில் விளையாடினார். அதில் 5, 18 என சொற்ப ரன்களை அடித்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் அடுத்தாண்டு நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கு ஷ்ரேயாஸ் ஐயரின் பேக்-அப் வீரராக ருதுராஜ் பார்க்கப்படுகிறார். இதனால் ஓடிஐ போட்டிகளில் இவரை தொடர்ச்சியாக காணலாம்.
TAGS:
IPL

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
கோவையில் ரூ.2,300 கோடி நிதி இழப்பு? திமுக மீது விஜய் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! வானதி சீனிவாசன்

கோவையில் ரூ.2,300 கோடி நிதி இழப்பு? திமுக மீது விஜய் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! வானதி சீனிவாசன்

2

அன்பில் மகேஷ் உள்ளிட்ட 3 பேரை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவு!

3

டிசம்பரில் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. தொழில், பணவரவில் அமோக வளர்ச்சி!

4

வேலை தேடுபவரா? சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.. எங்கு? யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?

5

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.