யாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டாக்ஸிக். இந்த திரைப்படம் நெகடிவான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இதற்கான வசூல் விவரம் குறித்து இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கீது மோகன் தாஸ் இயக்கத்தில், யாஷ் நடித்திருந்த படம் டாக்சிக். உலகம் இந்தியா முழுவதும் இந்த படத்திற்கு பல்வேறு ப்ரமோஷன்கள் நடந்ததை அடுத்து, தற்போது அப்படம் வெளியான பின்பு பல்வேறு நெகடிவ் விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு மத்தியிலும், இப்படம் பெற்றிருக்கும் கோடிக்கணக்கான வசூல் அனைவர் மத்தியிலும் வைரலாகி வருகிறது.
1/5
டாக்சிக்
கேஜிஎஃப் புகழ் யாஷ் நடிப்பில் வெளியான படம், டாக்சிக். இந்த படத்தை கீது மோகன் தாஸ் இயக்கியிருக்கிறார். இதில் யாஷுடன் சேர்ந்து நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் இந்தியாவில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான படமாகும்.
2/5
யாஷ்
யாஷுக்கு கேஜிஎஃப் திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்ததை அடுத்து அவருடைய மார்கெட் பெரும் உச்சிக்கு சென்றது. அதே பாணியில்தான், டாக்சிக் திரைப்படமும் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது இப்படத்தை பார்க்கும் போது தெரிகிறது.
3/5
நெகடிவ் விமர்சனங்கள்
பெரும் பட்ஜெட்டில் உருவான டாக்சிக் திரைப்படம், வெளியான முதல் நாளிலேயே கடும் நெகடிவ் விமர்சனங்களுக்கு ஆளானது. ஹாலிவுட் ரேஞ்சிற்கு இருக்கும் என நினைத்த படம், தமிழில் வெளியான தக் லைஃப் படத்தை விடவும் மோசமான கதையோட்டத்துடன் இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்தனர்.
4/5
முதல் நாள் வசூல்
படம் ரிலீஸான முதல் நாளே சுமார் ரூ.101 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்பட்டது. நெகடிவ் விமர்சனங்கள் வெளியானதற்கு மத்தியில் இரண்டாம் நாளில் அந்த வசூல் பயங்கர அடி வாங்கி இருக்கிறது.
5/5
2ஆம் நாள் வசூல்
இரண்டாம் நாளில் இப்படம் கிட்டத்தட்ட ரூ.37 கோடி மட்டுமே வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே, மொத்தமாக இரண்டு நாட்களில் இப்படம் 137.50 கோடிதான் வசூலித்துள்ளதாம். இதற்கு மேலும் வரும் நாட்களில் இந்த வசூல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.