SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அர்னாப் புயல் நிவாரண பணிகள்: மத்திய அரசிடம் ரூ.50 கோடி இடைக்கால நிதி உதவி கோரிய புதுச்சேரி முதல்வர்

Puducherry: புயல் நிவாரண நிதி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். இந்த அதிகாரப்பூர்வ கடிதத்தில், புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழு ஒன்றை அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Written By Sripriya Sambathkumar
Published: Oct 31, 2026, 12:58 PM IST | Updated: Oct 31, 2026, 01:16 PM IST
Join

புதுச்சேரி: 'அர்னாப்' புயல் நாடு முழுவதும் பல மாவட்டங்களில் பெரும் இழப்பையும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மிகத் தீவிர புயலான அர்னாப் புயலால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, ஏனாம் (Yanam) பகுதியில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, மத்திய அரசு உடனடியாக ₹50 கோடி இடைக்கால நிதியுதவியை வழங்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம்

புயல் நிவாரண நிதி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். இந்த அதிகாரப்பூர்வ கடிதத்தில், புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழு ஒன்றை அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், முக்கியமான உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் மத்திய அமைச்சகங்களின் ஆதரவை அவர் கோரியுள்ளார். இதுமட்டுமின்றி துறை வாரியான இழப்புகள் மற்றும் தேவைப்படும் நிதி குறித்த விரிவான அறிக்கையை அரசு விரைவில் சமர்ப்பிக்கும் என்றும் புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! ரூ.7,000 தீபாவளி போனஸ் அறிவிப்பு.. புதுச்சேரி அரசு அதிரடி

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்

புதுச்சேரி அரசு எடுத்துவரும் புயல் நிவாரண நடவடிக்கைகள் பற்றியும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புயலால் ஏற்பட்ட இடிபாடுகளை அகற்றி, அத்தியாவசிய சேவைகளை மீண்டும் வழங்க நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனாம் என்பது புவியியல் ரீதியாகத் தனித்து அமைந்துள்ள ஒரு சிறிய பகுதி என்றும், அங்கு நிதி ஆதாரங்கள் குறைவாகவே இருப்பதால், மத்திய அரசின் உடனடி உதவி மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க | புதுச்சேரி கனமழை கொடூரம்: 2000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின! -விவசாயிகள் வேதனை

அர்னாப் புயலால் கடும் சேதம்

அக்டோபர் 28-ஆம் தேதி அதிகாலை நர்சாபூர் அருகே கரையை கடந்த இந்தப் புயலால், ஏனாம் பகுதியில் மணிக்கு 125 கி.மீ முதல் 150 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. அத்துடன், 113.2 மி.மீ மழை பெய்தது. கன மழை காரணமாகவும், கடல் நீர் உட்புகுந்ததாலும் கடுமையான வெள்ளமும் ஏற்பட்டது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) முன்கூட்டியே அளித்த எச்சரிக்கையின் காரணத்தால் சுமார் 2,500 மக்களை 21 பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியதாக முதல்வர் சுட்டிக்காட்டினார். இப்படிப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதால், உயிர் இழப்புகளோ, காயங்களோ அல்லது கால்நடைகள் உயிரிழப்போ ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஏனாமில் ஏற்பட்ட பெரிய சேதங்கள்

ஏனாமில் ஏற்பட்ட பெரிய சேதங்கள் பற்றி முதல்வர் ரங்கசாமி கூறியதாவது:

மேலும் படிக்க | இனி இலவச வேட்டி சேலை இல்லை! பயனாளிகளுக்கு ரூ.1000 -புதுச்சேரி அரசு முக்கிய அறிவிப்பு

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES