புதுச்சேரி : நடைபாதையில் வாகனம் ஓட்டாதீங்க! மீறினால் ரூ.5000 அபராதம்.. புது ரூல்ஸ்
பாதசாரிகள் நடந்து செல்லும் நடைபாதையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் விதமாக, வாகனத்தை நிறுத்தினால் வாகன ஓட்டிகளுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று புதுச்சேரியில் விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
புதுச்சேரியில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், புதிதாக போக்குவரத்து விதி முறைகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
வாகன ஓட்டிகளுக்கு விதிமுறைகள்:
புதுச்சேரியில் சமீபத்தில் கொண்டு வரப்பட்டிருக்கும் போக்குவரத்து விதிமுறைகளின் படி, நடைபாதை மற்றும் சைக்கிள் பாதைகளின் வாகனஙக்ளை இயக்குவது அல்லது நிறுத்துவது தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், விதிமீறல்களுக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புதுச்சேரியில், வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக, முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதே நேரத்தில், நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், சாலையோர ஆக்கிரமிப்புகளாலும், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு சிரமத்திற்குள்ளாக்கபடுகிறார்கள்.
இதனால், பாதசாரிகள், சைக்கிளில் செல்பவரக்ள், மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, போக்குவரத்து ஒழுங்குமுறைகளில், பலவாரான புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ரூ.5,000 அபராதம்!
தற்போது, புதுச்சேரியின் புதிய விதிமுறைகளின்படி, பாதசாரிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் நடைபாதை மற்றும் சைக்கிள் பயணிகளுக்கான பிரத்யேக பாதைகளில், எந்தவொரு வாகனத்தையும் இயக்கவோ அல்லது நிறுத்தவோ கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்முறை இந்த விதியை மீறினால், அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். அதே சமயத்தில் அவர்கள் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடுபவர்களாக இருந்தால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நடைபாதையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்துவது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு நாளொன்றுக்கு ரூ.1000 கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை!
புதிய விதிமுறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கபட்டுள்ளது. சக்கர நாற்காலிகள் உள்ளிட்டவை, தடையின்றி செல்லும் வகையில் தொடர்ச்சியான நடைபாதி அமைக்கப்பட்டிருக்கிறது. நடைபாதைகளில் எந்த இடையூறுகளும் ஏற்படாத வகையில், அவற்றின் வடிவமைப்பு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
150 மீட்டருக்கு ஒருமுறை சாலையை கடக்கும் வசதி..!
மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில், சாலையை பாதுகாப்பாக கடக்கும் வசதிகளை ஏற்படுத்தவும் புதிய விதிகள் வலியுறுத்துகின்றன.
தேவையன இடங்களில், 150 மீட்டருக்கு ஒருமுறை பாதசாரிகள் சாலையை பாதுகாப்பாக கடக்கும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், சாலையை கடக்கும்போது பாதசாரிகள் விபத்தில் சிக்குவதை குறைக்க முடியும்.
வேக கட்டுப்பாடு:
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, பள்ளிகள் அமைந்திருக்கும் பகுதிகளில், வாகனங்களின் வேக்த்துக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.
பள்ளிகள் இருகும் பகுதிகளில், அதிகபட்சமாக மணிக்கு 25 கிலோ மீட்டர் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைக்கு அருகே அமைந்திருக்கும் பள்ளிகளில் வாகன கட்டுப்பாடானது மணிக்கு 40 கி.மீ ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளிலிருந்து குறைந்தது 500 மீட்டர் முன்பாகவே எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என்றும், இந்த விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக, பள்ளி நேரங்களில் மாணவர்கள் சாலையை கடக்கையில், விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
பிற விதிமுறைகள்:
மேற்கூறியதை தாண்டி மேலும் பல விதிமுறைகள் விடுக்கப்பட்டுள்ளன.
சைக்கிளில் செல்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகயில், முக்கிய சாலையில் தனி சைக்கிள் பாதைகள் அமைக்க புதிய விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் சைக்கிள் பயணிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, விளக்குகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும் முன்புற்த்தில் வெள்ளை நிறமும், பின்புறத்தில் சிவப்பு நிறத்திலும் விளக்கு பொருத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைக்கிளை பிற வாகனங்கள் முந்தும் போது 1.5 மீட்டர் இடைவேளை பராமரிக்க வேண்டும் என விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இடைத்தேர்தல்: 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை... புதுச்சேரியில் அறிவிப்பு