SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

புதுச்சேரி மருத்துவ PG சேர்க்கைக்கு திடீர் தடையா? மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

Puducherry PG Admission 2026: புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரிக்கு Deemed University அந்தஸ்து வழங்கப்பட்டதைத் தொடர்ந்து PG மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வை எந்த அமைப்பு நடத்த வேண்டும் என்பது தொடர்பாக சட்ட சிக்கல் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் தெளிவு கிடைக்கும் வரை மாணவர் சேர்க்கை, கட்டண வசூல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் மதராஸ் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Written By Shiva Murugesan
Published: Nov 19, 2026, 15:36 IST | Updated: Nov 19, 2026, 15:39 IST
Image Credit: File | Madras HC Stays PG Admissions at Puducherry Medical College
Join

Puducherry PG Admission 2026: புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியின் (SVMCH&RI) முதுநிலை மருத்துவ (MD/MS) படிப்பு சேர்க்கை நடைமுறைகளுக்கு மதராஸ் உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. கலந்தாய்வை நடத்தும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பான சட்டபூர்வ குழப்பம் நிலவுவதால், மாணவர்கள் சேவை, கட்டண வசூல் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் நீதிமன்றத்தின் தெளிவான விளக்கம் கிடைக்கும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவு PG மருத்துவ சேர்க்கைக்காக காத்திருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

PG மருத்துவ சேர்க்கைக்கு உயர்நீதிமன்றத்தின் திடீர் இடைக்கால தடை ஏன்?

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் MD/MS முதுநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கை நடவடிக்கைகள் தற்போது சட்டப்பூர்வ சிக்கலில் சிக்கியுள்ளன. இந்த நிலையில், மதராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி கே. சுரேந்தர், மாணவர்கள் சேர்வு மற்றும் கூடுதல் சேர்க்கை நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார்.

‘Deemed University’ அந்தஸ்தே சர்ச்சைக்கு காரணமா?

கல்லூரிக்கு கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி ‘Deemed University’ அந்தஸ்து வழங்கப்பட்டது. அதற்கான அறிவிப்பு அக்டோபர் 17-ம் தேதி இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. விதிகளின்படி, Deemed University-களுக்கான மருத்துவ PG கலந்தாய்வை Medical Counselling Committee (MCC) தான் நடத்த வேண்டும் என்று கல்லூரி தரப்பு வாதிட்டது.

இதனையடுத்து, 2026-27 கல்வியாண்டிற்கான PG மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வை MCC நடத்த உத்தரவிடக் கோரி கல்லூரி உயர்நீதிமன்றத்தை அணுகியது.

மேலும் படிக்க - Puducherry News ஜிப்மர் போராட்டம், தெருநாய் தொல்லை, புயல் எச்சரிக்கை முழு விவரம்

சென்டாக் நடத்திய கலந்தாய்வால் எழுந்த கேள்விகள்

இதற்கிடையில், புதுச்சேரியின் மையப்படுத்தப்பட்ட சேர்க்கை அமைப்பான CENTAC, நவம்பர் 5-ம் தேதியிட்ட நீதிமன்ற விளக்க உத்தரவை அடிப்படையாகக் கொண்டு கலந்தாய்வு செயல்முறையை முன்னெடுத்தது.

அதன்படி நவம்பர் 6-ம் தேதி இட ஒதுக்கீட்டு விவரங்களும், நவம்பர் 12-ம் தேதி இறுதி தரவரிசைப் பட்டியலும், நவம்பர் 13-ம் தேதி தற்காலிக இட ஒதுக்கீட்டு பட்டியலும் வெளியிடப்பட்டன. கலந்தாய்வுக்குப் பிறகு 63 மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நீதிமன்றம் கூறிய முக்கிய கருத்து

Deemed University-க்கான கலந்தாய்வை MCC ஆ அல்லது CENTAC ஆ நடத்த வேண்டும் என்ற முக்கிய கேள்வி குறித்து முன்பு வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளில் தெளிவான தீர்ப்பு இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும் இதுகுறித்து உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்விடம் (Division Bench) தரப்புகள் விளக்கம் பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அந்த விளக்கம் கிடைக்கும் வரை அனைத்து சேர்க்கை நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்படுகின்றன என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சேர்க்கை பெற்ற மாணவர்களின் நிலை என்ன?

ஏற்கனவே மாணவர்கள் சேர்க்கை பெற்றிருந்தாலும், அவர்களின் சேர்வு மற்றும் கட்டண வசூல் ஆகியவை எதிர்கால நீதிமன்ற விளக்க உத்தரவுக்கு உட்பட்டதாக இருக்கும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் இந்த வழக்கால் பாதிக்கப்படும் மாணவர்களும் வழக்கில் தரப்பினராக சேர்க்கப்படலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அடுத்த விசாரணை எப்போது?

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் டிசம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ PG படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த தெளிவு அடுத்த விசாரணைக்குப் பிறகே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க - புதுச்சேரி டாப் செய்திகள்: அறிவியல் கண்காட்சி முதல் அத்வான் புயல் எச்சரிக்கை வரை முக்கிய அப்டேட்கள்!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.
Read More

ZEENEWS TRENDING STORIES