12 ஆண்டுகளுக்கு பின் குருவின் ஆட்டம்.. இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம், வெற்றி!
Guru Peyarchi September: குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பிறகு சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைகிறார. இதனால், அக்டோபர் முதல் சில ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் தீர்ந்து, நேர்மறையான ஆற்றல் உண்டாகும். தொழில், வேலையில் முன்னேற்றம் இருக்கும். அவை என்னென்ன ராசிகள் என்று பார்ப்போம்.
Guru Peyarchi September: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக குரு பகவான் அறியப்படுகிறார். குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குரு பகவான் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் தற்போது கடக ராசியில் இருக்கிறார். இந்த நிலையில், குரு பகவான் அக்டோபர் மாதத்தில் மிகப்பெரிய பெயர்ச்சி நடக்கிறது.
அக்டோபர் மாதம் 31ஆம் தேதி குரு பகவான் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைகிறார். ஓராண்டு சிம்ம ராசியில் குரு பகவான் பயணிக்க உள்ளார். சிம்ம ராசியில் குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு கழித்து சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைய உள்ளார். இதனால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், செல்வம் பெருகும்.
சிம்மம் (Leo Zodiac Sign)
சிம்ம ராசியின் முதல் வீட்டில் குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார். இதனால், சிம்ம ராசிக்காரர்கள் குருவின் அருள் முழுமையாக கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ப அங்கீகாரங்கள் கிடைக்கும்.
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
கடகம் (Cancer Zodiac Sign)
கடக ராசியின் 2வது வீட்டில் குரு பகவான் பெயர்ச்சி அடைய உள்ளார். இதனால், இந்த ராசிக்காரர்களுக்கு குருவின் அருளால் முன்னேற்றம் அடைவார்கள். சுப காரிய முயற்சிகள் வெற்றி பெறும். பழைய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல்கள் உண்டாகும்.
பயணம் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாகன வசதிகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாகும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். சிந்தனை போக்கில் சில மாற்றம் ஏற்படும். கால்நடை வளர்ப்பு மூலம் ஆதாயம் அடைவீர்கள்.
மகரம் (Capricorn Zodiac Sign)
மகர ராசியின் 8வது வீட்டில் குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார். குரு பகவான் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகளும் எண்ணங்களும் பிறக்கும். கற்பனை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்து வந்த எதிர்ப்புகள் குறையும்.
குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். வெளியூர் பயணங்கள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இணையம் சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். கலை துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன்கள் தீர ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)