ராஞ்சியை சேர்ந்த 18 வயது மாணவர்தான் சர்தாக் சித்தாந்த். இவர், சிபிஎஸ்இ வாரியத்தின் டிஜிட்டல் விடைத்தாள் மதிப்பீட்டு டெண்டரில் உள்ள முரண்பாடுகளை ஆய்வு செய்து, தேசிய அளவில் கவனம் ஈர்த்தவர். இவர், தற்போது இன்னொரு புதிய கண்டுபிடிப்பின் மூலம் பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறார்.
ஒரு தகவலை, பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிப்பது வேறு, ஆனால், அவர்கள் அதனை தெரிந்து கொள்ளும் அளவிற்கு அதனை மேம்படுத்துவது வேறு. இந்தியாவில் வாக்குரிமை வைத்திருக்கும் குடிமக்கள் கோடிக்கணக்கானோருக்கு, தேர்தல் ஆணையத்தின் SIR லிஸ்டில் தங்கள் பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிக்கவே கடினமாக இருக்கிறது. இதற்கு ஒரு குறிப்பிட்ட வழிமுறையை கையாண்டு, அதை சரியாக செய்தால்தான் அவர்களுக்கு வேண்டிய ரிசல்டே வரும். அந்த ரிசல்டில் வரும் PDF-ல், உங்கள் பெயர் இருக்கிறதா, இல்லையா என்பதை நெடு நேரம் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால், அதில் உங்கள் பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை, நாம் ஒரு நொடியில் கண்டுபிடித்து விடலாம் என்பதை 18 வயது மாணவரான சர்தாக் சித்தாந்த் கண்டுபிடித்திருக்கிறார்.
ஜார்காண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர்தான் சர்தாக் சித்தாந்த். இவர், சிபிஎஸ்இயின் ஸ்க்ரீன் மர்க்கிங் அமைப்பின் குறைபாடுகளையும் முறைகேடுகளையும் சுட்டிக்காட்டியவர். இதன் டெண்டர் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டிய அவர், இது தொடர்பாக நாடாளுமன்ற குழு முன்பும் ஆஜராகி விளக்கமளித்தார். CBSE அமைப்பு குறித்து கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, 2026ல் டைம் 100 நெக்ஸ்ட் பட்டியலில் இடம் பெற்றார்.
இது குறித்து அவர், சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், “வணக்கம் நண்பர்களே, இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) உத்தரப் பிரதேசத்திற்காக வெளியிட்ட ஒவ்வொரு வாக்காளர் பட்டியல் PDF-ஐயும் நாங்கள் OCR செய்தோம். 2024 மக்களவைத் தொகுதிப் பட்டியல், இரண்டு SIR பட்டியல்கள் மற்றும் 2027 வரைவுப் பட்டியல் ஆகியவை இதில் அடங்கும். 6.8 லட்சம் PDF-கள், பெரும்பாலும் ஸ்கேன் செய்யப்பட்டவை. இப்போது 54.8 கோடி வரிசைகள் உள்ளன; 403 தொகுதிகளில் ஒவ்வொன்றிற்கும் ஒரு அட்டவணை” எனும் பெயரில், ஒரு லிங்கை வழங்கி இருக்கிறார்.
hello chat, we OCR'd every voter rolls PDF that the ECI put out of Uttar Pradesh. the 2024 Lok Sabha roll, both SIR rolls and the 2027 draft. 6.8 lakh PDFs, mostly scans. Now 54.8 crore rows, one table for each of the 403 constituencies. Free to download, Link below. https://t.co/eyW6CwNi3R
— Sarthak Sidhant (@sidhant_sarthak) November 24, 2026
இந்த திட்டத்தில், 2024 மக்களவைத் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்கள், 'சிறப்புத் தீவிர மறுஆய்வு' (SIR) செயல்முறையின்போது தயாரிக்கப்பட்ட வரைவு மற்றும் இறுதிப் பட்டியல்கள், மற்றும் 2027-ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் ஆகியவற்றை கொண்டதாக இருக்கின்றனர்.
இந்திய தேர்தல் அணையத்தால் வெளியிடப்பட்ட தரவுகளில், முக்கால்வாசி, ஸ்கேன் செய்யப்பட்டவை. அதிலும், ஒரு குறிப்பிட்டப்பக்கத்தை ஸ்கேன் செய்து பதிவிடப்பட்டவை. இதனால், பலரால் தங்கள் பெயர் இந்த பட்டியலில் இருக்கிறதா இல்லையா என்பதை தேட முடியவில்லை. இதையடுத்து, சித்தாந்த் ஒரு முடிவுக்கு வந்தார். அவரும் அவர் குழுவும் சேர்ந்து, Optical Character Recognition (OCR) எனும் டெக்னாலஜியை இதற்காக உபயோகித்திருக்கின்றனர். இந்த தொழில்நுட்பம், கணினி, ஸ்கேன் செய்யப்பட்ட ஃபல்களில் இருக்கும் எழுத்துகளை படித்து, அதை தேடுபொறி இருக்கும் ஒரே தரவாக மாற்றினர்.
அதாவது, அனைத்து போட்டோ காப்பிகளிலும் இருக்கும் எழுத்துகளை, textஆக மாற்றும் கருவியை இவர்கள் உபயோகித்து அதில் Search Bar இருக்கும் வசதியை உருவாக்கி இருக்கின்றனர்.
தனிநபர் விவரங்களை பாதுகாக்கும் பொருட்டு, இவர்களின் குழு வாக்காளர்களின் பெயர்களையும், அவர்களின் உறவினர்களின் பெயர்களையும், வக்காளர் எண்களையும், வீட்டு நம்பரையும் நீக்கி இருக்கிறது. ஆனால் அதற்கு பதிலாக, அவர்கள் குறியிடப்பட்ட அடையாள எண்களைப் பயன்படுத்தினார்கள். இது, மக்கள் அனைவரும், தனி நபரின் விவரங்களை பாதுகாத்து தங்கள் விவரங்களையும் சரிபார்க்க முடியும்.
இந்த தரவுகளில், SIR வாக்காளர் பட்டியல்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளில் சிறு பிழைகள் இருக்கலாம் என்றும் அந்த குழு குறிப்பிட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அசல் கோப்புகளை மட்டுமே அதிகாரப்பூர்வமானதாகக் கருத வேண்டும் என்று அவர் தெளிவாக சித்தாந்த் கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் எம்.பி கௌரவ் குகாய், இந்த விஷயத்திற்கு வரவேற்பு அளித்துள்ளார். கடந்த சில வருடங்களாக எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்தி வாக்காளர் லிஸ்ட் கணினியில் எளிதில் தேடும் வகையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், இப்படியொரு விஷயத்தை கண்டுபிடித்துள்ளது வரவேற்க தக்கது என கூறியிருக்கிறார். தன் போஸ்டில், “நான் சர்தாக் சித்தாந்தின் பணியை வரவேற்கிறேன். இதை செய்வது மிகவும் கடினமான ஒன்று, ஆனால் முக்கியமானதும் கூட. ஜனநாயகம், பொதுமக்கள் அரசாங்கத்தை உற்று நோக்கும் போதுதான் வலுவடையும்” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இன்னும் பல தலைவர்கள், இந்த செயலை பாராட்டி இருப்பதோடு இதுதான் உண்மையான பொது சேவை என்றும் கூறி வருகின்றனர். தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் செய்யாத அரசு வேலையை இவர் செய்ததாக அனைவரும் கூறி வருகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல்களின் எளிதில் தேடக்கூடிய PDF நகல்களை வழங்குமாறு தேர்தல் ஆணையம் அதன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. நவம்பர் 17 அன்று, உத்தரப் பிரதேசத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகமும் 2027 ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலுக்காக இதேபோன்ற PDF கோப்புகளை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.