18 ஆண்டுகளுக்கு பின்.. கடகத்தில் கேது! இந்த 4 ராசிகளுக்கு டிசம்பர் முதல் ராஜவாழ்க்கை
Ketu Peyarchi Palangal: கேது பகவான் 18 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரனின் ராசியில் பெயர்ச்சி அடைய உள்ளார். இதனால், ரிஷபம், துலாம், கன்னி, கும்பம் ஆகிய ராசிகளுக்கும் நேர்மறையான ஆற்றல் உண்டாகும். இதனால், சந்திரன், கேதுவின் அருள் முழுமையாக இவர்களுக்கு கிடைக்கும்.
Ketu Peyarchi Palangal: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக கேது பகவான் அறியப்படுகிறார். கேது பகவானின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். கேது பகவான் 18 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். கேது பகவான் தற்போது மிதுன ராசியில் இருக்கிறார். டிசம்பர் 5ஆம் தேதி கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
கேது பெயர்ச்சி
18 ஆண்டுகளுக்கு பிறகு, கேது பகவான் சந்திரனின் ராசியில் பெயர்ச்சி அடைய உள்ளார். 18 மாதங்கள் சந்திரனின் ராசியான கடகத்தில் கேது பகவான் நிலைத்திருப்பார். கேது பகவானின் இந்த பெயர்ச்சி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடக ராசியில் கேது பெயர்ச்சி அடைவது 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
| கிரகம் | கேது பகவான் |
| பெயர்ச்சி | கேது |
| ராசி | கடகம் |
| கிரக பெயர்ச்சி நாள் | டிசம்பர் 5 |
| அதிர்ஷ்ட ராசிகள் | ரிஷபம், துலாம், கன்னி, கும்பம் |
ரிஷபம் (Taurus Zodiac Sign)
கேது பகவானின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டத்தை கொடுக்கும். உங்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரும். தடை நீங்கி, நினைத்த காரியங்கள் நிறைவேறும். நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த பணிகளை முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களி உதவி செய்வார்கள். தொழிலில் வளர்ச்சி இருக்கும்.
புதிய முதலீடுகள் செய்ய வாய்ப்புள்ளது. தொழிலையும் விரிவாக்கம் செய்வீர்கள். வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் டிசம்பர் முதல் நல்ல செய்திகளை கேட்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் கைகூடும். திருமண வரன் கைகூடும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும்.
கன்னி (Virgo Zodiac Sign)
கேது பகவான் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். எதிலும் முன்யோசனையுடன் செயல்படவும். வெளியூர் தொடர்பான வர்த்தகத்தில் சிந்தித்து செயல்படவும். வெளிப்படையான குணத்தின் மூலம் நட்பு வட்டம் அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்கள் ஆதாயம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள்.
தவறிய சில ஆவணங்களை அறிவீர்கள். மனதளவில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். சுபகாரியங்கள் தொடர்பான சுபவிரயங்கள் உண்டாகும். வியாபார பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும்.
கும்பம் (Aquarius Zodiac Sign)
கேது பகவான் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். டிசம்பர் முதல் பொற்காலமாக அமையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தன வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பேச்சு வன்மையால் காரிய சித்தி ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.
சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். இணைய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மருமகன் வழியில் இருந்த வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு பணிகளில் அனுகூலம் உண்டாகும். சகோதர வகையில் அனுசரித்து செல்லவும்.
துலாம் (Libra Zodiac Sign)
கேது பகவான் பெயர்ச்சி துலாம் ராசிக்கு நேர்மறையான ஆற்றலை உண்டாகும். தொழிலில் அசுர வளர்ச்சி அடைவீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். வித்தியாசமான கற்பனைகள் மனதில் மேம்படும். சிற்றின்ப விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும்.
எதிர்கால தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்லவும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். வித்தியாசமான கற்பனைகள் மனதில் மேம்படும். சிற்றின்ப விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும்
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)