கஜகேசரி ராஜயோகம்: இன்று முதல் 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும்!
Gajakesari Rajyog: அக்டோபர் 4ஆம் தேதியான இன்று கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் 3 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
Gajakesari Rajyog: ஜோதிடத்தின்படி, 12 ராசிகளுக்கு குறிப்பிட்ட நாட்களில் தங்களது ராசியை மாற்றி வருகின்றனர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும்போது சில ராஜயோகங்களும் உருவாகிறது. அந்த வகையில், அக்டோபர் 4ஆம் தேதியான இன்று சுக்கிரன் கடக ராசியில் பெயர்ச்சி அடைய உள்ளார். கடக ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார்.
கடக ராசியில் குருவும் சுக்கிரனும் இணைவது முக்கியமான ராஜயோகம் உருவாகிறது. அதாவது, குரு சுக்கிரன் கடக ராசியில் இணைவது கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்கிறது. கஜசேகரி ராஜயோகம் அக்டோபர் 6ஆம் தேதி இரவு 10.17 மணி வரை நீடிக்கும். அதன்பின், சிம்ம ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி அடைகிறார். எனவே, கஜகேசரி ராஜயோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் நன்மைகளை பெறுவார்கள் என்பது குறித்து பார்ப்போம்.
மேலும் படிக்க: எதிரெதிர் சந்திக்கும் சனி - சூரியன்.. இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்!
துலாம் (Libra Zodiac Sign)
துலாம் ராசியின் 10வது வீட்டில் குரு சுக்கிரன் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாக உள்ளது. இதனால், துலாம் ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் குறைந்து சுதந்திரத்தன்மை மேம்படும். உடன் இருப்பவர்கள் மூலம் புதிய கண்ணோட்டம் உண்டாகும். எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் தாமதமாக நிறைவேறும். தொழிலில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். தடைபட்ட தனவரவுகள் கிடைக்கும். வாகன பயணங்கள் மூலம் லாபகரமான சூழ்நிலைகள் உருவாகும்.
மகரம் (Capricorn Zodiac Sign)
மர ராசியின் 7வது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால், அந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்தநிலை குறையும். மனை சார்ந்த செயல்களால் ஆதாயம் அடைவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
புதிய முதலீடு செயல்களில் தகுந்த ஆலோசனைகளைப் பெறவும். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். மறதி பிரச்சனை குறையும். கணவன்-மனைவியிடையே அன்யோன்யம் ஏற்படும். முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். நெருக்கமானவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும்
கும்பம் (Aquarius Zodiac Sign)
கும்ப ராசியின் 6வது வீட்டில் கஜசேகரி ராஜயோகம் உருவாகிறது. இதனால், செல்வம், அதிர்ஷ்டம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் உருவாகும். கால்நடைப் பணிகளில் விவேகம் வேண்டும். நீண்ட கால கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். கவனக்குறைவால் சில பிரச்சனைகள் உண்டாகும். வரவுகளில் இழுபறியான சூழல் நிலவும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.
நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் புதிய அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். சுப காரியங்களில் இருந்து தடைகள் விலகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் ஏற்படும்.
(பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)
மேலும் படிக்க: அக்டோபர் 4 ராசிபலன் : இன்று எந்தெந்த ராசிகளுக்கு சாதகமான நாள்...?