குரு-செவ்வாய் சேர்க்கை: அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்!
கடக ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை அக்டோபர் 31 வரை நீடிக்கும் நிலையில், 3 ராசிக்காரர்களுக்கு தொழில், பணம் மற்றும் வாழ்க்கையில் சாதகமான பலன்கள் கிடைக்கலாம்.
ஜோதிடத்தில் குரு மற்றும் செவ்வாய் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்த கிரகங்களாக கருதப்படுகின்றன. செவ்வாய் தைரியம், செயல்திறன் மற்றும் துணிச்சலை குறிக்கும் நிலையில், குரு ஞானம், வளர்ச்சி, செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்துடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இணைவது ஜோதிட ரீதியாக குறிப்பிடத்தக்க நிகழ்வாக கருதப்படுகிறது.
தற்போது குரு பகவான் தனது உச்ச வீடான கடக ராசியில் சஞ்சரித்து வருகிறார். இதே ராசியில் செவ்வாயும் பயணித்து வருவதால், இரு கிரகங்களின் சேர்க்கை உருவாகி உள்ளது. இந்த கூட்டணி அக்டோபர் 31 ஆம் தேதி வரை தொடரும். இதனால் அக்டோபர் மாதம் முழுவதும் இந்த கிரக சேர்க்கையின் தாக்கம் பல்வேறு ராசிகளிலும் காணப்படலாம்.
இந்த சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு தொழில், பணம், உறவுகள் உள்ளிட்ட விஷயங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக மூன்று ராசிகளுக்கு இந்த காலகட்டம் கூடுதல் பலன்களை வழங்கக்கூடும்.
ரிஷபம் (Taurus Zodiac Signs)
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த குரு - செவ்வாய் சேர்க்கை முயற்சிகளில் வேகத்தை ஏற்படுத்தும் காலமாக அமையலாம். தொடங்கும் பணிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். இதுவரை மேற்கொண்ட முயர்சிகளுக்கு உரிய பலன் கிடைப்பதற்கான சூழல் உருவாகும். தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், சில முக்கியமான முயற்சிகள் வெற்றியடையவும் வாய்ப்புள்ளது. குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் உதவியும் சில நேரங்களில் முக்கியமாக அமையலாம். திருமண வாழ்க்கையில் கணவன் - மனைவி இடையே புரிதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
துலாம் (Libra Zodiac Signs)
துலாம் ராசிக்காரர்களுக்கு குரு - செவ்வாய் கூட்டணி தொழில் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் கவனத்தை ஈருக்கும் காலமாக இருக்கலாம். பணியில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மாற்றங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். வேலை தொடர்பான இடமாற்றம் அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். சொத்து தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகளை எதிர்பார்க்கலாம். நிதி நிலையும் மேம்படும் சூழல் உருவாகலாம். ஏற்கனவே மேற்கொண்ட முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்த வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கலாம். திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் துலாம் ராசியினருக்கும் இந்த காலகட்டத்தில் நல்ல வரன் அல்லது வாழ்க்கைத்துணை அமையும் வாய்ப்பும் இருக்கலாம்.
தனுசு (Sagittarius Zodiac Signs)
தனுசு ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் புதிய வாய்ப்புகளை கொண்டு வரும் காலமாக அமையலாம். குறிப்பாக வெளிநாடு அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடைய பணிகளில் இருப்பவர்களுக்கு நிதி ரீதியான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்ல வேண்டும் என்ற முயற்சியில் இருப்பவர்களுக்கு சாதகமான தகவல்கள் கிடைக்கலாம். மாணவர்கள் தங்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி செயல்பட்டால், கடின உழைப்புக்கான நல்ல முடிவுகளை பெறலாம். இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த சில நல்ல செய்திகள் கிடைக்கலாம். பொருளாதார நிலையில் ,இம்மேற்ற ஏற்படுவதுடன், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வாய்ப்புகளும் உருவாகலாம். இதனால் தனுசு ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்ததாக அமையலாம்.