SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

குரு பெயர்ச்சி: அக்டோபர் வரை 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை.. கோடீஸ்வர யோகம்!

Guru Peyarchi Palangal: குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி அக்டோபர் 8ஆம் தேதி நடக்கிறது. இதனால், 3 ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும். செல்வம், புகழ் நிலைத்திருக்கும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Oct 03, 2026, 12:56 PM IST | Updated: Oct 03, 2026, 01:08 PM IST
Join

Guru Peyarchi Palangal: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக குரு பகவான் அறியப்படுகிறார். குரு பகவான் 12 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குரு பகவான் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், குரு பகவான் அக்டோபர் 8ஆம் தேதி நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். 

குரு பகவான் ஆயில்யம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். அக்டோபர் 8ஆம் தேதி மாலை 7.03 மணிக்கு குரு பகவான் ஆயில்யம் நட்சத்திரத்தின் மூன்றாம் வீட்டில் பெயர்ச்சி அடைகிறார்.  அக்டோபர் 31ஆம் தேதி வரை இந்த நட்சத்திரத்தில் நிலைத்திருப்பார். குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் பெருகும். அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

மகரம் (Capricorn Zodiac Sign)

குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு  சாதகமாக இருக்கும். இந்த ராசியின் 7ஆம் வீட்டில் குரு நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் திருமணமாதவர்களுக்கு திருமண வரன்கள் வரக்கூடும். திருமணத்திற்கு நீண்ட காலமாக இருந்து வந்த தடைகள் நீங்கும். பணியில் இருப்பவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்களை பெறுவார்கள். 

மனதளவில் இருந்து வந்த குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். சுப காரியங்களில் இருந்த பிரச்சனைகள் விலகும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் சில சலுகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்யோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். கல்வியில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றம் ஏற்படும்.

மேலும் படிக்க: அக்டோபர் 3 ராசிபலன் : இன்று எந்தெந்த ராசிகளுக்கு பண வர அதிகரிக்கும்?

ரிஷபம் (Taurus Zodiac Sign)

குரு பெயர்ச்சி ரஷப ராசியின் 3ஆம் வீட்டில் பெயர்ச்சி நடக்கிறது.  இதன் காரணமாக, வியாபார நிமித்தமான முதலீடுகள் அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் வரவுக்கு ஏற்ற செலவுகள் உண்டாகும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். 

புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வர்த்தக செயல்களில் விவேகம் வேண்டும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைக்கூடிவரும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் கோபம் இன்றி செயல்படவும். மனதை பாதிக்கும் வகையிலான நகைச்சுவை பேச்சுக்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் ஒருவிதமான தாமதங்கள் ஏற்படக்கூடும்.

மேலும் படிக்க: செவ்வாய் பெயர்ச்சி: பண மழையில் நனையப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்!

கடகம் (Cancer Zodiac Sign)

குரு பெயர்ச்சி ரஷப ராசியின் 4ஆம் வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். வெளியூர் வேலை வாய்ப்புகள் சாதகமாகும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் ஏற்படும். சமூகப் பணிகளில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உலக வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டங்கள் உருவாகும். தன்னம்பிக்கையான சில பேச்சுக்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்கும். 

வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்கிறீர்கள். பிள்ளைகள் வழியில் ஆதரவு ஏற்படும். உத்தியோகப் பணிகளில் நல்ல பெயர் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். வாழ்கை துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கற்பனை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். அறிவியல் சார்ந்த துறைகளில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும்.

(பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)

மேலும் படிக்க: துலாம் ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: அக்டோபர் 17 முதல் இந்த 3 ராசிகளுக்கு ராஜயோகம்!

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES