குரு பெயர்ச்சி: அக்டோபர் 31 முதல் பல உச்சங்களை எட்டப்போகும் 3 ராசிகள் இவைதான்
Guru Peyarchi Palangal: குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக்கூடும்.
Guru Peyarchi Palangal: அனைத்து கிரகங்களிலும் சனி பகவானும், குரு பகவானும் மிகவும் முக்கியமான கிரகங்களாக கருதப்படுகின்றார்கள். சனி பெயர்ச்சியும், குரு பெயர்ச்சியும் முக்கிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன.
அக்டோபர் இறுதியில் குரு பெயர்ச்சி
இன்னும் சில நாட்களில் குரு பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படவுள்ளது. அவர் அக்டோபர் 31 அன்று, சூரியனின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஜோதிட சாஸ்திரப்படி, குரு சிம்ம ராசிக்குள் நுழையும்போது செவ்வாய் கிரகத்தைப் போலவே செயல்பட்டு, அதே போன்ற பலன்களைத் தருவார்.
ராசி மாற்றம், நட்சத்திர மாறம், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் என கிரகங்களின் அனைத்து விதமான மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை எற்படுத்தும்.
அந்த வகையில் குரு பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக்கூடும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் புதிய உயரங்களை எட்டவும், நிதி நன்மைகளைப் பெறவும் வாய்ப்புள்ளது. குரு பகவானின் அருளால் வாழ்வில் பல உச்சங்களை எட்டப்போகும் அந்த ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்.. தொழிலில் முன்னேற்றம்!
குரு பெயர்ச்சி பலன்கள் சுருக்கமாக..
| ராசிகள் | பலன்கள் |
| சிம்மம் | மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் |
| துலாம் | குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும் |
| தனுசு | பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு |
சிம்மம் (Leo): மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்
சிம்ம ராசியில்தான் குரு பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் சிம்ம ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குரு செவ்வாயின் தாக்கத்தை வெளிப்படுத்துவார் என்பதால், உங்கள் தைரியமும் வீரமும் கூடும். உங்கள் தலைமைத்துவப் பண்புகள் பணியிடத்தில் முன்னேற்றம் காண உதவும்.
சில சிம்ம ராசிக்காரர்கள் உயர் பதவியைப் பெற்று, கணிசமான நிதி ஆதாயங்களை அடையக்கூடும். சமூக அளவில், இந்த ராசிக்காரர்கள் மதிப்பையும் மரியாதையையும் பெறுவார்கள். இந்தப் பெயர்ச்சிக்குப் பிறகு, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பது உங்கள் வாழ்க்கையில் முன்னேற உதவும்.
மேலும் படிக்க | மிதுனத்தில் சேரும் சுக்கிரன் - சந்திரன்: இந்த 3 ராசிகளுக்கு வெற்றி வந்துசேரும்...
துலாம் (Libra): குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்
துலாம் ராசிக்காரர்களுக்கு, அக்டோபர் 31 அன்று நிகழும் குரு பெயர்ச்சி உங்கள் 'லாப ஸ்தானத்தில்' (பதினொன்றாம் வீடு) அமையும். இந்தப் பெயர்ச்சியின் தாக்கத்தால், புதிய வருமான வழிகள் கிடைக்கலாம். உங்கள் வங்கிச் சேமிப்பு உயரலாம். பணியிடத்தில் உள்ள தடைகள் நீங்கும். உங்கள் பணி வேகத்தைக் கண்டு மேலதிகாரிகள் மகிழ்ச்சியடைவார்கள்.
குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். குரு பகவானின் அருளால் சிலர் தாங்கள் விரும்பிய இடத்தில் வேலை வாய்ப்பைப் பெறவும் வாய்ப்புள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது, மேலும் குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவு மேம்படும்.
தனுசு (Sagittarius): பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு
குரு பகவான் தனுசு ராசிக்காரர்களின் ராசியின் அதிபதி ஆவார். இந்த குரு பெயர்ச்சி அவர்களது 'பாக்கிய ஸ்தானத்தில்' (ஒன்பதாம் வீடு) நிகழும். இந்தப் பெயர்ச்சி உறங்கிக்கொண்டிருக்கும் உங்கள் அதிர்ஷ்டத்தை தட்டி எழுப்பும் ஆற்றல் கொண்டது. நீங்கள் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் வேலை வாய்ப்பைப் பெறலாம்.
நீண்ட காலமாக ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்குப் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. குரு பகவானின் அருளால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் பெரும் நன்மைகளை அடையலாம். இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களின் கனவுகளும் நனவாகலாம். இந்த காலத்தில் வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்... பண வரவு பன்மடங்காகும்