அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!
அக்டோபர் 31-ல் சிம்ம ராசியில் நிகழும் குரு - கேது சேர்க்கையால் மேஷம், கடகம், சிம்மம் மற்றும் தனுசு ஆகிய 4 ராசிகளுக்கு நிதி நிலை உயர்ந்து தொழிலில் பெரும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஜோதிட சாஸ்த்திரன்படி, குரு பகவான் செல்வம், ஞானம், வளர்ச்சி மற்றும் அதிர்ஷ்டத்தின் காரணியாக கருதப்படுகிறார். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக விளங்குகிறார். பொதுவாக குரு ஒரு ராசியில் சுமார் ஓராண்டு காலம் சஞ்சரிப்பார். எனவே குருவின் ராசி மாற்றம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தற்போது கடக ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் 2026 அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைகிறது. ஏற்கனவே சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் கேதுவுடன் குரு இணைவதால், குரு - கேது சேர்க்கை உருவாகும். நிழல் கிரகமாக கருதப்படும் கேது ஆன்மீகம், எதிர்பாராத மாற்றங்கள் மற்றும் மர்மமான நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தப்படுகிறார். இந்த நிலையில், குரு மற்றும் கேதுவின் சேர்க்கை 12 ராசிகளிலும் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும். குறிப்பாக மேஷம், கடகம், சிம்மம், தனுசு ஆகிய நான்கு ராசிகளுக்கு நிதி மற்றும் தொழில் சார்ந்த முன்னேற்றங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அந்த ராசிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு இந்த குரு - கேது சேர்க்கை பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ஆம் வீட்டில் நிகழ்கிறது. இதனால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கிடைப்பதற்கும், புதிய வருமான வாய்ப்புகள் உருவாவதற்கும் சாதகமான சூழல் அமையலாம். வேலை செய்ப்வர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படுவதுடன், ப்தவி உயர்வு அல்லது ஊதிய தொடர்பான வாய்ப்புகளும் உருவாகலாம். தொழில் நடத்துபவர்களுக்கு லாபம் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். இருப்பினும், பணம் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது நிதானமாக செயல்படுவது அவசியம்.
கடகம்
கடக ராசியினருக்கு இந்த கிரக சேர்க்கை 2ஆம் வீட்டில் நிகழ்கிறது. இந்த வீடு குடும்பம், சேமிப்பு மற்றும் பேச்சாற்றல் ஆகிய சுற்றுடன் தொடர்புடையது. இதனால் வருமானத்தை அதிகரிப்பதற்கும் சேமிப்பை மேம்படுத்துவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம். நீண்ட காலமாக உழைத்து வருபவர்களுக்கு பணியிடத்தில் அங்கீகாரம் கிடைக்கலாம். முதலீடுகள் மூலம் ஆதாயம் கிடைக்கும் சூழலும் உருவாகலாம். அதே நேரத்தில், புதிய முதலீடுகளில் ஈடுபடுவதற்கு முன்பு அதன் சாதக, பாதங்களை ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசியினரின் ராசியிலேயே குரு - கேது சேர்க்கை நிகழ்வதால், இந்த காலகட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எதிர்பாராத வருமான வாய்ப்புகள் உருவாகலாம். தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் கிடைக்கலாம். வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் அல்லது ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த சில பணிகளை நிறைவு செய்தற்கான வாய்ப்புகளும் உருவாகலாம். செல்வாக்கு மிக்க நபர்களின் அறிமுகம் தொழில் வளர்ச்சிக்கு உதவக்கூடும்.
தனுசு
தனுசு ராசியினருக்கு குரு - கேது சேர்க்கை 9 ஆம் வீட்டில் நகழ உள்ளது. இந்த வீடு அதிர்ஷ்டம், உயர்கல்வி, ஆன்மிகம் மற்றும் நீண்ட தூரப் பயணங்களுடன் தொடர்புடையது. எனவே, புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கும் தொழில் வளர்ச்சிக்கான பாதைகள் திறப்பதற்கும் சாதகமான காலமாக இருக்கலாம். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததைவிட நல்ல வருமானம் கிடைக்கலாம். பணப் பிரச்சினைகளைச் சந்தித்து வருபவர்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வழிகளைத் தேடிக் கண்டறியலாம். வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கலாம். இருப்பினும், எந்தவொரு முயற்சியிலும் திட்டமிடலும் தொடர்ச்சியான உழைப்பும் முக்கியம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)