ஜோதிடத்தில் குரு பகவான் செல்வம், அறிவு, வளர்ச்சி, அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பை வழங்கும் கிரகமாக பார்க்கப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குருவின் நிலை சாதகமாக இருந்தால், வாழ்க்கையில் முன்னேற்றம் பொருளாதார வளர்ச்சி மறும் சமூகத்தில் மதிப்பு போன்ற பலன்கள் கிடைக்கும்.
தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதியான குரு பகவான் தற்போது தனது உச்ச ராசியான கடகத்தில் சஞ்சரித்து வருகிறார். ராசி மாற்றம் மட்டுமின்றி, குருவின் நட்சத்திர பெயர்ச்சியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அந்த வகையில், தற்போது ஆயில்யம் நட்சத்திரத்தின் 3ஆம் பாதத்தில் பயணித்து வரும் குரு பகவான், அக்டோபர் 8 ஆம் தேதி ஆயில்யம் நட்சத்திரத்தின் 4ஆம் பாதத்திற்குள் நுழைகிறார். இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை கொண்டு வரும்.
ரிஷப ராசியினருக்கும் குருவின் இந்த மாற்றம் சிறப்பான பலன்களை வழங்கக்கூடும். குறிப்பாக தன்னம்பிக்கை, மன தைரியம் மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை முடிக்கும் திறன் மேம்படும். அதிர்ஷ்டத்தின் ஆதரவும் கிடைக்கக்கூடும். பணியிடத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை மற்றும் தொழிலில் நீண்ட நாட்களாக சந்தித்து வந்த சிரமங்கள் படிப்படியாக குறைந்து நிம்மதி கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான தருணங்கள் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பும் உருவாகலாம்.
கடக ராசிக்காரர்களுக்கு குருவின் இந்த நட்சத்திர பெயர்ச்சி மிகவும் சாதகமான காலகட்டமாக அமையக்கூடும். வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளில் முன்னேற்றஹ்த்டையும் வெற்றியையும் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். பணியிடத்தில் முக்கியமான பொறுப்புகள் உங்களை தேடி வரலாம். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கலாம். ஆன்மீக விஷயங்களில் நாட்ட்ம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. மேலும், சட்டம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான முடிவுகளை பெறும் சூழலும் உருவாகலாம்.
குருவின் இந்த நட்சத்திர பெயர்ச்சி மகர ராசியினருக்கு பல்வேறு வகைகளில் சாதகமாக அமையக்கூடும். வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையலாம். வேலை பார்க்கும் நபர்களுக்கு பணியிடத்தில் சாதகமான செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிக்கும் சூழல் உருவாகும். அதேபோல், சமூகத்தில் உங்களுக்கான மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும் வாய்ப்புகளும் உருவாகலாம்.
பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.