SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்.. தலைவிதியே மாறும்

Ketu Nakshatra Peyarchi: கேது பகவான் அக்டோபர் 3ஆம் தேதி மக நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைய உள்ளார். மக நட்சத்திரத்தில் கேதுவின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Sep 27, 2026, 10:05 IST | Updated: Sep 27, 2026, 10:12 IST
Join

Ketu Nakshatra Peyarchi: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக கேது பகவான் அறியப்படுகிறார். கேது பகவானின் பெயர்ச்சி 18 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். கேது பகவானின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.  ராசி மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் கேது பகவான் அவ்வப்போது மாற்றுகிறார். அந்த வகையில், கேது பகவான் நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். 

கேது பெயர்ச்சி

அக்டோபர் மாதம் 3ஆம் தேதி இரவு 9.48 மணிக்கு கேது பகவான் மக நட்சத்திரத்தின் முதல் கட்டத்தில் பெயர்ச்சி அடைகிறார். இந்த நேரத்தில் கேது பகவான் சிம்ம ராசியில் நிலைத்திருக்கும். கேது பகவான் மக நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைவது 4 ராசிகளுக்கு நேர்மறையா ன ஆற்றலை கொடுக்கும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.

ரிஷபம் (Taurus Zodiac Sign)

கேது நட்சத்திர பெயர்ச்சியால் உங்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். உங்களுககு இருந்து வந்த பிரச்னைகள் தீரும்.  குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். தனம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்படும். வியாபார பணிகள் மந்தமாக நடைபெறும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் தாமதமாகி நிறைவு பெறும்.

வாக்குறுதிகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். உத்தியோகப் பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல்கள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மனதிற்கு நம்பிக்கையை தரும்.

கடகம் (Cancer Zodiac Sign)

கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும்.  நிதி நிலைமை மேம்படும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.  பணியிடத்தில் நீங்கள் பலன்களை பெறுவீர்கள். கடினமான செயல்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சேமிப்பு செயல்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகம் நிமித்தமான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். 

எழுத்து பணிகளில் புதுமையான சூழல் அமையும். சிறு மற்றும் குறுந்தொழிலில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் தடைகள் தோன்றி மறையும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். விவேகமான சிந்தனைகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சிறுதூரப் பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

மகரம் (Capricorn Zodiac Sign)

மகர ராசியின் எட்டாம் வீட்டில் கேது நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் நீண்ட நாலமாக இருந்து வந்த பிரச்னைகள் தீரும். தடைகள் நீங்கும். நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக  முடியும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உருவாகும். வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலை உருவாகும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் துரிதமும் விவேகமும் வெளிப்படும். 

வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். உறவினர்கள் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வேலையாட்கள் பற்றிய புரிதல் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது பற்றிய சிந்தனைகள் ஏற்படும். அரசு காரியத்தில் பொறுமை வேண்டும். சிந்தனை போக்கில் சில மாற்றம் ஏற்படும்.

கும்பம் (Aquarius Zodiac Sign)

கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் உங்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். கேது பகவான் 7ஆம் வீட்டில் நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் உங்களுக்கு இருந்து பிரச்னைகள் தீரும்.  புத்திரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி முன்னேறுவதற்கான சிந்தனைகள் பிறக்கும். 

சக ஊழியர்களைப் பற்றிய புரிதல்கள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் புதிய நம்பிக்கையை உருவாக்கும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES