செவ்வாய் - குரு சேர்க்கை: செப்டம்பர் 18 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணமழை, ராஜயோகம்!
செப்டம்பர் 18 ஆம் தேதி கடக ராசியில் செவ்வாய் மற்றும் குரு சேர்க்கை நடக்க இருக்கிறது. இந்த சேர்க்கை 3 ராசிக்காரர்களுக்கு அபிரிமிதமான நன்மைகளை தர இருக்கிறது.
நவகிரகங்கள் தங்களின் நிலையை அவ்வப்போது மாற்றிக்கொண்டு, ஒன்றுடன் ஒன்று இணைந்து பல்வேறு கிரக அமைப்புகளை உருவாக்குகின்றன. அந்த வகையில், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று கடக ராசியில் செவ்வாய் மற்றும் குரு பகவான் இணைய உள்ளனர். செப்டம்பர் 18 ஆம் தேதி மாலை 4.35 மணிக்கு செவ்வாய் கடக ராசிக்குள் நுழைய உள்ளது. ஏற்கனவே குரு கடகத்தில் இருப்பதால் இரு கிரகங்களும் ஒரே ராசியில் சந்திக்கின்றன.
இந்த சேர்க்கை அக்டோபர் 29ம் தேதி வரை நீடிக்கும். செவ்வாய் மற்றும் குரு ஆகிய இரு கிரகங்களும் ஜோதிடத்தில் முக்கியத்துவம் பெற்றவை என்பதால், அவற்றின் சேர்க்கை சில ராசிகளுக்கு சாதகமான பலன்களை வழங்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக வேலை, தொழில், பணவரவு மற்றும் சொத்து சார்ந்த விஷயங்களில் சிலருக்கு முன்னேற்றம் ஏற்படலாம். அந்த வகையில் அதிர்ஷ்டம் பெறக்கூடிய 3 ராசிகள் குறித்து பார்க்கலாம்.
மேஷம் (Aries Zodiac Signs)
மேஷ ராசியினருக்கு இந்த கிரக சேர்க்கை தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக சாதகமான சூழலை உருவாக்கக்கூடும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கலாம். தொழில் செய்து வருபவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வளர்ச்சியை பெறுவதற்கான சந்தர்ப்பங்களும் உருவாகலாம். புதிய முதலீடுகள் அல்லது தொழில் விரிவாக்கம் தொடர்பான முடிவுகளில் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தினரின் ஆதரவும் கிடைக்கக்கூடும். இதுவரை இருந்து வந்த சில பிரச்சினைகள் முடிக்கு வருவதன் மூலம் நிம்மதி பெற முடியும்.
கடகம் (Cancer Zodiac Signs)
செவ்வாய் மற்றும் குருவின் சேர்க்கையே கடக ராசியில் நடைபெறுவதால், இந்த ராசியினர் சிறப்பான பலன்களை பெற இருக்கின்றனர். தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், எதிர்மறையான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறனும் மேம்படலாம். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகலாம். தொடங்கிய பணிகளை திட்டமிட்டு செயல்படுத்தினால் வெற்றி கிடைக்கக்கூடும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் சூழலும் உருவாகலாம். உடல்நலம் தொடர்பான விஷயங்களிலும் கவனம் செலுத்தி வந்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.
துலாம் (Libra Zodiac Signs)
துலாம் ராசியினரின் தொழில் வாழ்க்கையில் இந்த காலகட்டம் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். பணியில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கலாம். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்ற எதிர்பார்ப்புகளும் நிறைவேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புதிய தொழில் முயற்சிகள் மற்றும் முதலீடுகள் மூலம் வருமானம் அதிகரிக்கக்கூடிய சூழல் உருவாகலாம். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பணவரவு கிடைக்கும் வாய்ப்புகளும் இருக்கலாம். மூதாதையர் சொத்து தொடர்பாக நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கக்கூடும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களும் சிறப்பான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)