குருவுடன் இணையும் செவ்வாய்.. இனி இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்! பணம் கொட்டும்!
வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்கு பெயர்ச்சியாகி குரு பகவானுடன் சேர்க்கை ஆகிறார். இந்த சேர்க்கை குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு அபிரிமிதமான நன்மைகளை தருகிறது.
ஜோதிடத்தில், கிரகங்களின் தளபதியாக திகழ்பவர் செவ்வாய். தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக இருக்கும் செவ்வாய், 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாறுகிறார். தற்போது செவ்வாய் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்த நிலையில், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
கடக ராசியில் ஏற்கனவே குரு இருக்கிறார். இதனால் செவ்வாய் மற்றும் குரு இடையே ஒரு சேர்க்கை நடக்கிறது. குரு பகவான் தனது உச்ச நிலையில் சஞ்சரிக்கும் காலத்தில் செவ்வாயின் நீச்ச நிலை நீங்கி, நீச்சபங்க ராஜயோகம் உருவாகும் என்று கூறப்படுகிறது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் தொழில், வருமானம், வியாபாரம் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.
இந்த யோகத்தின் பலன்கள் அனைத்து ராசிகளுக்கும் ஓரளவு கிடைத்தாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதன் தாக்கம் கூடுதல் நன்மைகளை தரும். குறிப்பாக தொழில் வளர்ச்சி, பணவரவு மற்றும் சொத்து சேர்க்கை போன்ற விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படலாம். அந்த வகையில் அதிர்ஷ்டம் பெறக்கூடிய 4 ராசிகளை பார்க்கலாம்.
மேஷம் (Aries Zodiac Signs)
மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் 4வது வீட்டில் சஞ்சரிப்பதால், வீடு, வாகனம், சொத்து மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம். பணியிடத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
நீண்ட நாட்களாக தாமதமாகி வந்த பணிகள் வேகமாக முடிவுக்கு வரலாம். வீடு அல்லது புதிய வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும் சூழல் உருவாகலாம். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிப்பதுடன், வாழ்க்கைத்துணையின் ஆதரவும் கிடைக்கும்.
மிதுனம் (Gemini Zodiac Signs)
மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் 2வது வீட்டில் சஞ்சரிப்பது நிதி ரீதியாக சாதகமான பலன்களை வழங்கக்கூடும். நீண்ட காலமாக வசூலாகாமல் இருந்த பணம் கிடைக்கலாம். வருமானத்தை பெருக்கும் புதிய வாய்ப்புகளும் உருவாகும். பணியிடத்தில் உங்களின் பேச்சு திறனும், தகவல் தொடர்பு திறனும் பாராட்டப்படலாம்.
தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் அல்லது லாபம் தரக்கூடிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் நீடித்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையலாம். காதல் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான தருணங்கள் அதிகரிக்கலாம். மாணவர்களுக்கு முயற்சிக்கேற்ற வெற்றி கிடைக்கும். அதே நேரத்தில் பணம் தொடர்பான முடிவுகளில் அவசரப்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது.
கடகம் (Cancer Zodiac Signs)
கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் லக்னத்தில் சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கை மற்றும் செயல்திறன் அதிகரிக்கலாம். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த முக்கியமான பணிகளை முடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
வேலையில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். தொழில் செய்து வருபவர்கள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை பெறலாம். சொந்த வீடு அல்லது வாகனம் வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறும் சூழல் உருவாகலாம்.
குடும்ப வாழ்க்கையில் அன்பும் புரிதலும் அதிகரிக்கலாம். வாழ்க்கைத்துணையுடனான உறவு வலுப்பெறுவதுடன், சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் உயரக்கூடும்.
தனுசு (Sagittarius Zodiac Signs)
தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் 8-வது வீட்டில் சஞ்சரிப்பதால், நிதி தொடர்பான சில முக்கியமான மாற்றங்கள் ஏற்படலாம். குறிப்பாக கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து படிப்படியாக விடுபடும் வாய்ப்பு கிடைக்கலாம்.
ஏற்கனவே செய்த முதலீடுகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். தொழில் செய்பவர்களுக்கு புதிய வருமான வழிகள் உருவாகும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
சொத்து வாங்கும் முயற்சிகளிலும் முன்னேற்றம் ஏற்படலாம். கணவன்-மனைவி இடையே நிதி சார்ந்த விஷயங்களில் நல்ல புரிதல் உருவாகும். இருப்பினும் பெரிய அளவில் முதலீடு செய்யும் முன் ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் ஒப்பந்த நிபந்தனைகளை முழுமையாக சரிபார்ப்பது அவசியம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)