SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கன்னியில் உருவாகும் பத்ரா ராஜயோகம்! இந்த 4 ராசிகளுக்கு பணம், தொழிலில் அமோக வளர்ச்சி

Bhudhan Peyarchi: வரும் செப்டம்பர் 07 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசியில் நுழைகிறார். இந்த ராசி பெயர்ச்சி குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அபிரிமிதமான பலன்களை கொடுக்க இருக்கிறது.

Written By R Balaji
Published: Sep 01, 2026, 16:28 IST | Updated: Sep 01, 2026, 16:32 IST
Join

ஜோதிடத்தில் புதன் கிரகம் அறிவு மற்றும் புத்திசாலித்தனத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. ஒருவரின் பேச்சுத்திறன், கல்வி, வியாபாரம் உள்ளிட்டவற்றில் புதன் முக்கிய பங்கு வகிப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மிதுனம் மற்றும் கன்னி ஆகிய இரண்டு ராசிகளுக்கும் புதனே அதிபதியாக உள்ளார்.

நவகிரகங்களில் வேகமாக ராசியை மாற்றும் கிரகங்களில் புதனும் ஒருவர். அந்த வகையில், வரும் செப்டம்பர் 7ஆம் தேதி புதன் தனது சொந்த ராசியான கன்னியில் நுழைகிறார். சொந்த வீட்டில் புதன் சஞ்சரிப்பதால், ஜோதிட ரீதியாக இது மிகவும் வலிமையான நிலையாக பார்க்கப்படுகிறது.

மேலும், கன்னி ராசியில் புதன் அமர்வதால் பத்ரா ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகம் தொழில், வியாபாரம், பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும்.

இந்த கிரக மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பணம் தொடர்பான விஷயங்களில் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். இந்த நிலையில், பத்ரா ராஜயோகத்தால் அதிக பலன்களை பெறக்கூடிய 4 ராசிகள் குறித்து பார்க்கலாம்.

மிதுனம் (Gemini Zodiac Signs)

மிதுன ராசியின் அதிபதியே புதன் என்பதால், இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமானதாக அமையக்கூடும். குறிப்பாக தொழில் சார்ந்த விஷயங்களில் உங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கலாம். \வியாபாரம் செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், புதிய வீடு அல்லது வாகனம் வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையும் நிறைவேறுவதற்கான சூழல் உருவாகலாம். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து, வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

சிம்மம் (Leo Zodiac Signs)

புதன் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரலாம். இதனால் சேமிப்பும் வங்கி இருப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கக்கூடும். அதேபோல், உங்களின் பேச்சுத்திறனும் இந்தக் காலகட்டத்தில் முக்கிய பலமாக மாறும். நீங்கள் பேசும் விதம் மற்றவர்களை எளிதில் ஈர்க்கும் என்பதால், பல்வேறு விஷயங்களை சாதகமாக முடித்துக் கொள்ள முடியும். குறிப்பாக மார்க்கெட்டிங் மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு இந்தக் காலம் கூடுதல் நன்மைகளை வழங்கக்கூடும்.

தனுசு (Sagittarius Zodiac Signs)

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி வேலை மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக இருக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடி வருபவர்களுக்கு தகுந்த வாய்ப்பு கிடைக்கலாம். தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் அல்லது பெரிய ஆர்டர்கள் கிடைக்கும் சூழல் உருவாகலாம். ஏற்கனவே செய்து வரும் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்புகளும் அமையலாம். வேலையில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இதனால் பொறுப்புகளை நம்பிக்கையுடன் ஏற்று, கொடுக்கப்பட்ட பணிகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். உங்களின் செயல்திறன் பணியிடத்தில் நல்ல பெயரை பெற்றுத்தரும்.

கன்னி (Virgo Zodiac Signs)

புதன் கன்னி ராசியிலேயே சஞ்சரிப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு பத்ரா ராஜயோகத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக உங்களின் சிந்திக்கும் திறனும், முக்கியமான முடிவுகளை எடுக்கும் திறனும் மேம்படும். எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக ஆராய்ந்து முடிவு எடுப்பதால் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் திறமை வெளிப்படுவதுடன், மதிப்பு மற்றும் மரியாதையும் உயரும். கூட்டு தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். தொழில் கூட்டாளிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து, உறவு வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் மூலம் தொழிலை மேலும் சிறப்பாக கொண்டு செல்ல முடியும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES