SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

செப்டம்பர் 14ல் புதன் பெயர்ச்சி.. இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்! பண மழை கொட்டும்

செப்டம்பர் 14 ஆம் தேதி புதன் பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதன் தாக்கம் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நன்மைகளை கொண்டு வர இருக்கிறது.

Written By R Balaji
Published: Sep 03, 2026, 16:15 IST | Updated: Sep 03, 2026, 16:18 IST
Join

அறிவு, பேச்சு, வணிகம், நிதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு அதிபதியாக இருப்பவர் புதன். இவர் தனது நிலையை மாற்றிக்கொள்ளும்போது, அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் இருக்கும். இந்த நிலையில், புதன் கன்னி ராசியில் உதமாக உள்ளார். இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருந்தாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மட்டும் வேலைவாய்ப்பு, பொருளாதார ரீதியாக பல்வேறு நன்மைகளை அளிக்க உள்ளார்.

புதனின் இந்த பெயர்ச்சி வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி அதிகாலை 2.52 மணி அளவில் நடக்க இருக்கிறது. கன்னி ராசி புதனின் சொந்த ராசி என்பதால், இந்த பெயர்ச்சி ஜோதிடம் ரீதியாக மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

மிதுனம் (Gemini Zodiac Signs)

மிதுன ராசிக்கு அதிபதியான புதன், தற்போது உதயமாகும் நிலையில் இருப்பது இந்த ராசியினருக்கு சாதகமான மாற்றங்களை கொண்டு வரலாம். குறிப்பாக, தங்களது திறமை மற்றும் முயற்சிகளை சரியான முறையில் பயன்படுத்தினால் எதிர்பார்த்த வெற்றியை அடையும் வாய்ப்பு அதிகரிக்கும். வேலையிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதுடன், இதுவரை செய்த பணிகளுக்கான பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கலாம். கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சிகளுக்கான பலன்கள் தற்போது கிடைக்கத் தொடங்கும்.

இந்த காலகட்டத்தில் குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த பணிகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவு செய்ய முடியும். உடல்நிலையைப் பொறுத்தவரை பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல், வழக்கமான பணிகளை உற்சாகத்துடன் மேற்கொள்ள முடியும்.

கன்னி (Virgo Zodiac Signs)

கன்னி ராசியின் அதிபதியான புதன், அதே ராசியில் உதயமாவது இந்த ராசிக்காரர்களுக்கு குறிப்பிடத்தக்க சாதகமான மாற்றமாக அமையலாம். இதன் தாக்கத்தால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், முக்கியமான விஷயங்களில் தெளிவாக முடிவெடுக்கும் திறனும் மேம்படும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம் அல்லது எதிர்பார்த்த புதிய வாய்ப்புகள் தேடி வரலாம். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான சூழல் உருவாகலாம்.

பொருளாதார ரீதியாகவும் இந்த காலகட்டம் நல்ல முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி சிறப்பான முடிவுகளைப் பெறலாம். தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதால் முக்கிய பணிகளை எளிதாக முடிக்க முடியும். திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான சூழல் நிலவக்கூடும். மேலும், உயர்கல்விக்காக வெளிநாடு செல்லத் திட்டமிடுபவர்களுக்கு அதற்கான முயற்சிகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மகரம் (Capricorn Zodiac Signs)

மகர ராசிக்காரர்களுக்கு புதனின் உதயம் தொழில் மற்றும் பொருளாதார விஷயங்களில் புதிய முன்னேற்றத்திற்கான கதவுகளை திறக்கக்கூடும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, முக்கிய பொறுப்புகள் அல்லது புதிய பணிவாய்ப்புகள் கிடைக்கலாம். தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள், ஒப்பந்தங்கள் மற்றும் விரிவாக்கத்திற்கான வாய்ப்புகள் உருவாகலாம்.

நிதி சார்ந்த திட்டங்களை முறையாக செயல்படுத்தினால் எதிர்காலத்திற்கான சேமிப்பு மற்றும் முதலீடுகளில் முன்னேற்றம் காண முடியும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவும் கிடைக்கக்கூடும். வேலை அல்லது குடும்ப காரணங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதால் முக்கிய முடிவுகளை எடுப்பது எளிதாக இருக்கும். உடல்நிலையும் சாதகமாக இருந்து, அன்றாட செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES