SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அக்டோபரில் உருவாகும் 5 ராஜயோகங்கள்; இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

அக்டோபர் 2026ல் உருவாகும் புதாதித்ய, லட்சுமி நாராயண, மாளவ்ய உள்ளிட்ட யோகங்களால் கடகம், சிம்மம், துலாம், விருச்சிக ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கலாம்.

Written By R Balaji
Published: Sep 29, 2026, 17:03 IST | Updated: Sep 29, 2026, 17:09 IST
Join

அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில், இந்த மாதத்தில் நடைபெறவிருக்கும் கிரக மாற்றங்கள் ஜோதிடத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. சூரியன், புதன், சுக்கிரன், சந்திரன், செவ்வாய், குரு உள்ளிட்ட கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அவற்றின் சேர்க்கைகள் காரணமாக பல்வேறு யோகங்கள் உருவாகும்.

குறிப்பாக அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை அடுத்தடுத்து நிகழும் கிரக நிலை மாற்றங்கள் சில ராசிகளுக்கு சாதகமான பலன்களை வழங்கக்கூடும் வேலை, பணவரவு, தொழில், குடும்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இந்த மாற்றங்களின் தாக்கம் இருக்கலாம். அந்த வகையில், அக்டோபர் மாதத்தில் உருவாகும் முக்கிய யோகங்கள் என்ன? எந்தெந்த ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கலாம் என்பதை பார்க்கலாம்.

புதாதித்ய யோகம்

அக்டோபர் 17 ஆம் தேதி சூரிய பகவான் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார். ஏற்கனவே அங்கு புதன் பகவான் சஞ்சரித்து வருவதால், இரு கிரகங்களும் ஒரே ராசியில் இணையும் சூழல் உருவாகிறது. சூரியன் மற்றும் புதனின் இந்த சேர்க்கை ஜோதிடத்தில் புதாதித்ய ராஜயோகமாக குறிப்பிடப்படுகிறது. இதன் காரணமாக அறிவு, செயல்திறன், நிர்வாக திறன் உள்ளிட்ட விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

லட்சுமி நாராயண யோகம்

சுக்கிரன் அக்டோபர் மாதம் முழுவதும் துலாம் ராசியில் பயணிக்கிறார். அதே ராசியில் புதனும் இருப்பதால், புதன் - சுக்கிரன் சேர்க்கை ஏற்படுகிறது. இந்த கிரக இணைப்பு லட்சுமி நாராயண ராஜயோகத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இதன் தாக்கத்தால் பணம் வியாபாரம், காதல், ஆடம்பரம் மற்றும் வசதிகள் தொடர்பான விஷயங்களில் சில ராசியினருக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம்.

மாளவ்ய ராஜயோகம்

சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாமில் சஞ்சரிப்பது அக்டோபர் மாதத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றாக கருதப்படும் மாளவ்ய ராஜயோகம் இந்த நிலையில் உருவாகும். இதன் காரணமாக சில ராசியினருக்கு நிதி சார்ந்த தடைகள் குறைந்து, வாழ்க்கையில் வசதிகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

திரிகிரக யோகம்

அக்டோபர் 4 ஆம் தேதி சந்திரன் கடக ராசிக்குள் நுழைய உள்ளார். அந்த நேரத்தில் குரு மற்றும் செவ்வாய் ஆசிய கிரகங்களும் கடக ராசியில் இருப்பதால், மூன்று கிரகங்களின் சேர்க்கை ஏற்படும். சந்திரன், குரு மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் ஒரே ராசியில் இணைவதால் திரிகிரக யோகம் உருவாகும். இந்த கிரக அமைப்பு சில ராசியினருக்கு சாதகமான பலன்களை வழங்கக்கூடும்.

குரு பெயர்ச்சி

அக்டோபர் 31 ஆம் தேதி குரு பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார். சூரியன் மற்றும் குரு நட்பு கிரகங்களாக கருதப்படுவதால், இந்த பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், சிம்ம ராசியில் ஏற்கனவே கேது சஞ்சரித்து வருவதால், குருவின் பெயர்ச்சிக்கு பிறகு குரு - கேது சேர்க்கையும் ஏற்படும். இந்த மாற்றமும் சில ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

அக்டோபரில் அதிர்ஷ்டம் பெறக்கூடிய ராசிகள்

கடகம் (Cancer Zodiac Signs)

அக்டோபர் மாதத்தில் ஏற்படும் கிரக மாற்றங்கள் கடக ராசியினருக்கு பல்வேறு வகைகளில் சாதகமாக அமையலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்ககூடும். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் இதுவரை இருந்த பணம் தொடர்பான சிக்கல்களும் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. கூடுதலாக வருமானம் ஈடுவதற்கான புதிய வாய்ப்புகளும் உருவாகலாம்.

சிம்மம் (Leo Zodiac Signs)

சிம்ம ராசியினருக்கு அக்டோபர் மாதம் சாதகமான மாற்றங்களை கொண்டு வரும். நீண்ட நாட்களாக தாமதமாகி வந்த வேலைகள் மீண்டும் வேகமெடுத்து முடிவுக்கு வரலாம். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த நிதி பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் குழந்தைகள் தொடர்பாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் சூழலும் உருவாகலாம்.

துலாம் (Libra Zodiac Signs)

துலாம் ராசிக்கு அக்டோபர் மாத கிரக நிலைகள் முக்கியமானதாக அமையக்கூடும். சமூகத்தில்மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்க வாய்ப்புள்ளது. வீடு அல்லது வாகனம் வாங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படலாம். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு புதிய திட்டங்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், கூட்டுத் தொழில் தொடங்குவது தொடர்பான முயற்சிகளும் சாதகமான முடிவுகளை தரக்கூடும்.

விருச்சிகம் (Scorpio Zodiac Signs)

விருச்சிக ராசியினருக்கு அக்டோபர் மாதத்தில் நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படலாம். நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் கிடைப்பதற்கான சூழல் உருவாகக்கூடும். பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் உங்கள் தலைமைத்துவ திறமைகள் மேலதிகாரிகளின் கவனத்தை பெறலாம். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். இதன் மூலம் ஒட்டுமொத்த நிதி நிலைமையிலும் முன்னேற்றம் ஏற்படக்கூடும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES