செப்டம்பரில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்! யாரெல்லாம் தெரியுமா? பாபா வாங்கா கணிப்பு..
உலகின் முக்கிய கணிப்பாளர்களுள் ஒருவராக இருந்தவர், பாபா வாங்கா. இவருடைய கணிப்பின் படி வரும் செப்டம்பர் மாதத்தில் எந்தெந்த ராசிகள் அதிர்ஷ்டத்தோடு இருப்பார்கள் தெரியுமா? இதோ இங்கு தெரிந்து கொள்வோம்.
வருங்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் தீர்க்கதரிசிகளில் ஒருவராக இருந்தவர், பாபா வாங்கா. இவர், உலக வரலாற்று நிகழ்வு பல்வேறு சம்பவங்களை கணித்து கூறியவர் ஆவார். அவற்றில் சில உண்மையாகவும் நிகழ்ந்திருக்கிறது.
பாபா வாங்காவின் கணிப்புகள்..!
வாங்க வாங்க 1911 முதல் 1996 வரை இருந்த தீர்க்கதரிசி என அறியப்படுகிறார். பல்கேரியாவை சேர்ந்த இவர் 12 வயதாக இருக்கும் போது, தன்னுடைய கண் பார்வையை இழந்ததாகவும், அதன் பிறகு இவருக்கு வருங்காலத்தில் நிகழும் பல்வேறு விஷயங்கள் குறித்த கணிப்புகள் தெரிந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் உயிருடன் இருக்கும் போது வருங்காலம் குறித்து எழுதி வைத்து கோப்புகள் தான் தற்போது கணிப்புகளாக பகிரப்படுகின்றன. அந்த வகையில் இவர், 2026 பிற்பாதியில் யார் யாருக்கு அதிர்ஷ்டம் அளிக்கும் என்ற கணிப்புகளை எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. அப்படி அவர் குறிப்பிட்டு இருக்கும் ராசிகள் எவை தெரியுமா?
ரிஷபம்:
பாபா வாங்காவின் கணிப்புப்படி, ரிஷப ராசிக்கு செப்டம்பர் 2026 மாதம் சிறப்பானதாக அமையும் என்று கூறப்படுகிறது. இந்த ராசியை கொண்டவர்களுக்கு முதலீடுகள் மற்றும் சொத்து பரிவர்த்தனைகளில் லாபம் கிட்டலாம்.
இவர்கள் தங்களின் கடின உழைப்புக்கான பலன்களை பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும், சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய லாபகரமான வாய்ப்புகளும் கிடைக்கலாம் என கணிக்கப்படுகிறது. இதன் மூலம் இவர்களுக்கு வாழ்க்கையின் திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படலாம்.
சிம்ம ராசி:
பாபா வாங்காவின் முக்கிய கணிப்பின்படி, செப்டம்பர் மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு பணமும் புகழும் வந்து சேரலாம். இவர்கள் கட்டியாக தலைமைத்துவ பண்புகளை கொண்டுள்ளதால் அது முன்னேற்றத்திற்கும் உதவும் என கூறப்படுகிறது. இவர்களில் பலருக்கு பதவி உயர்வும், புதிய தொழில் ஆரம்பிக்கும் முயற்சி மற்றும் பெரிய திட்டங்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் தங்களுக்குள் இருக்கும் சோம்பேறித்தனத்தை விடுத்து சரியான நேரத்தில் தங்கள் வாழ்வை உயர்த்தும் நடவடிக்கையை எடுத்தால் கண்டிப்பாக நிதி நிலை உயருமாம்.
விருச்சிகம்:
வரும் செப்டம்பர் மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அவர்கள் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் நல்ல பலனை கொடுக்கும் என கூறப்படுகிறது. இவர்களுக்கு முதலீடுகளில் கணிசமான லாபம் கிடைத்து, நிவின் நிலையம் வலுப்பெறலாம் என கூறப்படுகிறது. இவர்களுக்கு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்காலத்தை மிகுந்த உறுதுணையாக இருக்கும் ஒருவரின் நட்பும் கிடைக்கலாம் என்றும். மேலும் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடப்பதுடன் புதிய வியாபாரம் தொடங்குவதற்கு சாதகமான சமயத்தை இந்த மாதம் அமைத்து தரும் என்றும் கூறப்படுகிறது.
கும்ப ராசி:
பாபா வங்காவின் கணிப்பின்படி வரும் செப்டம்பர் மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான மாதமாக இருக்கலாம் என தகவல் விளையாட்டு உள்ளது. இவர்களுக்கு தொழில் வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்கள் இருக்கும் என்றும் வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. பணியில் இருப்பவர்கள் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவும் அதற்கான தகுந்த வெகுமதியும் அவர்களுக்கு கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வாழ்க்கை இதற்கு முன் இருந்ததை விட அடுத்த கட்டத்திற்கு முன்னேற இதில் வாய்ப்பு இருப்பதாகவும் நிர்வாக திறன்கள் வலுப்பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)