செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணம், வேலை, தொழிலில் முன்னேற்றம்!
Sevvai Peyarchi Palangal: செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாய் பூச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகிறது. இந்த காலகட்டம் 3 ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு, குடும்பம் மற்றும் தனிப்பட்ட முயற்சிகளில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஜோதிடத்தில் செவ்வாய் கிரகம் தைரியம், துணிச்சல், வெற்றி, ஆற்றல் ஆகியவற்றை குறிக்கும் முக்கிய கிரகமாக பார்க்கப்படுகிறது. ஒருவரின் செயல்படும் திறன், போட்டிகளை எதிர்கொள்ளும் மனநிலை உள்ளிட்டவற்றிலும் செவ்வாயின் நிலை முக்கியத்துவம் பெறுகிறது.
செவ்வாய் ஒரு ராசியில் ஒன்றரை மாதம் அதாவது சுமார் 45 நாட்கள் வரை பயணிப்பார். அதேபோல், அந்த பயணத்தின்போது, வெவ்வேறு நட்சத்திரங்களை கடந்து செல்கிறது. அந்த வகையில், தற்போது மிதுன ராசியில் பயணித்து வரும் செவ்வாய், செப்டம்பர் 24 ஆம் தேதி பூச நட்சத்திரத்தில் நுழைய உள்ளது.
பூச நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் ஆவார். சனி ஒழுக்கம், பொறுமை, கடின உழைப்பு, பொறுப்பு மற்றும் நீண்ட கால வளர்ச்சியுடன் தொடர்புடையவராக கருதப்படுகிறார். இதனால் செய்யாவ் - சனியின் நட்சத்திரத்தில் பயணிக்கும் காலம், அவசர முடிவுகளை விட திட்டமிட்டு செயல்படுவதற்கு சாதகமாக இருக்கும்.
செவ்வாய் பூச நட்சத்திரத்தில் செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை பயணிக்க உள்ளார். இந்த காலகட்டம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளுக்கும் சாதகமாக இருந்தாலும், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு, குடும்பம் மற்றும் தனிப்பட்ட முயற்சிகளில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில், இந்த நட்சத்திர பெயர்ச்சியால் பலன் பெறக்கூடிய 3 ராசிகள் குறித்து பார்க்கலாம்.
மேஷம் (Aries Zodiac Signs)
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி மேஷ ராசியினருக்கு செயல்பாடுகளில் வேகத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்க செய்யும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த சில பணிகளை இந்த காலகட்டத்தில் நிறைவு செய்யும் சூழல் உருவாகலாம். சொத்து அல்லது நிலம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்து வருபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்களின் ஆதரவு சில முக்கியமான முடிவுகளில் உதவியாக இருக்கும். மேலும், பண விஷயங்களில் முன்பு இருந்த குழப்பங்கள் குறைந்து, வரவு - செலவை திட்டமிட்டு கையாளும் மனநிலை உருவாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவுவதுடன், மன அழுத்தமும் ஓரளவு குறையக்கூடும்.
சிம்மம் (Leo Zodiac Signs)
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி புதிய வாய்ப்புகளை தர இருக்கிறது. குறிப்பாக வேலை மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் மாற்றத்தை எதிர்பர்த்து கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். வேலை மாற்றம் குறித்து யோசித்து வருபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். பணியிடத்தில் உங்கள் திறமை மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பும் உள்ளது. இதன் காரணமாக கூடுதல் பொறுப்புகள் அல்லது புதிய பதவி கிடைக்கக்கூடும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகர்த்து தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவதற்கான சூழல் உருவாகலாம். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த வேறுபாடுகள் குறைந்து, உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கலாம். தன்னம்பிக்கை அதிகரிப்பதால் முன்பு தயங்கிய சில விஷயங்களிலும் துணிச்சலுடன் முடிவெடுக்கத் தொடங்குவீர்கள்.
கன்னி (Virgo Zodiac Signs)
கன்னி ராசியினருக்கு செவ்வாய் பூச நட்சத்திரத்தில் பயணிக்கும் காலம் தொழில் ரீதியாக முக்கியமானதாக இருக்கலாம். உங்களின் முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் அல்லது வியாபாரத்தில் சில சவால்கள் ஏற்பட்டாலும், அவற்றை பொறுமையுடன் கையாண்டு வெற்றி பெறக்கூடிய சூழல் உருவாகலாம். நீண்ட நாட்களாக தாமதமாகி வந்த பணிகள் படிப்படியாக முடிவுக்கு வரலாம். வேலை தேடி வருபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அல்லது புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பும் இருக்கலாம். சமூகத்தில் உங்களுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவுவதற்கான வாய்ப்பு உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)