SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்.. தொழிலில் முன்னேற்றம்!

Shani Peyarchi: சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளதால் ரிஷபம், மிதுனம், கன்னி, மகரம் ஆகிய 4 ராசிகளுக்கு தொழில் மற்றும் நிதி ரீதியாக சாதகமான பலன்கள் கிடைக்கும்.

Written By R Balaji
Published: Oct 10, 2026, 11:34 AM IST | Updated: Oct 10, 2026, 11:38 AM IST
Join

சனி பகவான் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவராக கருதப்படுகிறார். இதனாலேயே அவர் நீதியின் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். மகரம், கும்பம் ஆகிய ராசிகளின் அதிபதியான சனி, மற்ற கிரகங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் தங்கும் இவர், குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரங்களையும் மாற்றுகிறார். சனிய்ன் இந்த நகர்வுகள் 12 ராசிகளிலும் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும்.

அந்த வகையில், தற்போது மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் அக்டோபர் 9 ஆன் தேதி வக்ர நிலையில் ரேவதி நட்சத்திரத்திலிருந்து உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ந்துள்ளது. இந்த நட்சத்திர மாற்றத்தால் சில ராசியினருக்கு வேலை, தொழில் மற்றும் பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான சூழல் உருவாகலாம்.

குறிப்பாக, சில ராசிகளை சேர்ந்தவர்கள் தங்களின் முயற்சிகளுக்கு ஏற்ற முன்னேற்றத்தை காண்பதுடன், நீண்ட காலமாக இருந்து வந்த தடைகளும் குறையக்கூடும். அந்த ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இந்த நட்சத்திர மாற்றம் பொருளாதார விஷயங்களில் நம்பிக்கையை அளிக்கக்கூடும். வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். ஏற்கனவே வர வேண்டியிருந்த பணம் கிடைப்பதற்கான சூழலும் உருவாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது, நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த பணிகளை மீண்டும் தொடங்கி வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும். தனிப்பட்ட முயற்சிகளிலும் தொழில் சார்ந்த செயல்பாடுகளிலும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகலாம்.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு நிதி சார்ந்த விஷயங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். மேற்கொள்ளும் முயற்சிகளில் முன்னேற்றம் கிடைப்பதுடன், எதிர்பாராத வழிகளில் பணவரவு கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தொழில் செய்பவர்கள் ஏற்கனவே நிலுவையில் உள்ள திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளை பெறலாம். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு அவர்களின் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கக்கூடும். புதிய முயற்சிகளை திட்டமிட்டு செயல்படுத்துவதன் மூலம் வளர்ச்சிக்கான பாதைகளை உருவாக்க முடியும்.

கன்னி

கன்னி ராசியினருக்கு வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதற்கான சூழல் உருவாகக்கூடும். மாணவர்களுக்கு இந்த காலகட்டம் சாதகமாக அமையலாம். குறிப்பாக உயர்கல்விக்கு தயாராகி வருபவர்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் நல்ல முன்னேற்றத்தை அடைய வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிர்ணயித்த இலக்குகளை நோக்கி செயல்படுவதற்கும், முக்கியமான பணிகளை முடிப்பதற்கும் இந்த காலத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

மகரம்

மகர ராசியினருக்கு சனியின் நட்சத்திர மாற்றம் புதிய வாய்ப்புகளுக்கான தொடக்கமாக அமையலாம். இதுவரை தாமதமாகி வந்த வேலைகள் மீண்டும் வேகமெடுக்க வாய்ப்புள்ளது. முக்கியமான முயற்சிகளில் இருந்த தடைகள் படிப்படியாக குறையலாம். வெளிநாடு செல்ல திட்டமிடுபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். வெளிநாட்டில் தொழில் தொடங்குவது அல்லது அங்கு தொழில் சார்ந்த முயற்சிகளை மேற்கொள்வது குறித்து யோசிப்பவர்களுக்கும் சாதகமான சூழல் அமையலாம். இருப்பினும், வேலை மற்றும் பிற பொறுப்புகளுக்கு இடையே உடல்நலத்தையும் கவனித்துக்கொள்வது அவசியம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES