• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /சனி வக்ர நிவர்த்தி: 4 ராசிகளுக்கு தலைகீழாக மாறப்போகும் வாழ்க்கை.. ஜாக்பாட் அடிக்கும்!

சனி வக்ர நிவர்த்தி: 4 ராசிகளுக்கு தலைகீழாக மாறப்போகும் வாழ்க்கை.. ஜாக்பாட் அடிக்கும்!

வரும் டிசம்பர் 11 ஆம் தேதி மீன ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிப்பதால், ரிஷபம், கன்னி, துலாம், கும்பம் ஆகிய 4 ராசிகளுக்குப் பணவரவு, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட யோகப் பலன்கள் கிடைக்க போகின்றன.

Written ByR Balaji
Published: Nov 13, 2026, 01:11 PM IST|Updated: Nov 13, 2026, 01:16 PM IST
joinshare
சனி வக்ர நிவர்த்தி: 4 ராசிகளுக்கு தலைகீழாக மாறப்போகும் வாழ்க்கை.. ஜாக்பாட் அடிக்கும்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

2

CM விஜய் மாஸ் அறிவிப்பு; தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு - கௌரவ விரிவுரையாளர்களுக்கு குட் நியூஸ்

3

கிராம நீர்த்தொட்டியில் மலம் கழிக்கப்பட்டதா? மயிலாடுதுறை போலீசார் விளக்கம்

4

‘செங்குலம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் க்ளிம்ப்ஸ் வெளியீடு! கவுதம் கார்த்திக் நடிக்கும் படம்..

5

Explained : இந்தியாவில் திருமணம் செய்யாதவர்களுக்கு..வெளிநாட்டில் No Divorce! தீர்ப்பின் பின்னணி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சனி பகவான் ஒருவரின் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்கும் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். இதனால் சனியின் பெயர்ச்சி, வக்ர நிலை மற்றும் நேரடி இயக்கம் ஆகியவை ஜோதிடத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. மற்ற கிரகங்களுடன் ஒப்பிடும்போது சனியின் சஞ்சாரம் மிகவும் மெதுவானது. ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் தங்கும் சனி பகவான், தற்போது குரு பகவானின் ஆதிக்கம் கொண்ட மீன ராசியில் பயணித்து வருகிறார்.

இந்த நிலையில், வரும் டிசம்பர் 11 ஆம் தேதி மீன ராசியில் வக்ர நிலையில் இருந்து சனி பகவான் மீண்டும் நேரடி இயக்கத்திற்கு மாறுகிறார். இந்த பயணம் 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை தொடரும். சனியின் இந்த மாற்றம் 12 ராசிகளிலும் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும். குறிப்பாக 4 ராசிகளுக்கு மட்டும் பணவரவு, வேலையில் முன்னேற்றம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட சாதகமான பலன்களை வழங்க இருக்கிறது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் நேரடி இயக்கம் தொழில் சார்ந்த விஷயங்களில் புதிய முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கலாம். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படுவதுடன், எதிர்பார்த்த புதிய வாய்ப்புகளும் தேடி வரலாம். வருமானத்தை அதிகரிப்பதற்கான சூழல் உருவாகலாம் என்பதால், சேமிப்பிலும் முதலீடுகளிலும் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். நீண்டகாலமாக நிறைவேறாமல் இருந்த இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளும் வேகமெடுக்கலாம். முக்கியமான நபர்களின் அறிமுகமும் ஆதரவும் வாழ்க்கையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

கன்னி

கன்னி ராசியினருக்கு இந்த கிரக மாற்றம் பொருளாதார ரீதியாக சாதகமான சூழலை உருவாக்கலாம். வருமானம் அதிகரிப்பதுடன், தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி நிதிநிலையை சீரமைக்கவும் வாய்ப்புகள் கிடைக்கலாம். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவதுடன், போட்டி தேர்வுகளிலும் நல்ல முடிவுகளை பெறலாம். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதுடன், எதிர்காலத்தில் லாபம் தரக்கூடிய திட்டங்களையும் தொடங்க வாய்ப்புள்ளது. காதல் உறவுகளில் மகிழ்ச்சியும் புரிதலும் அதிகரிக்கலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களின் வேலை மற்றும் வணிகம் தொடர்பான முயற்சிகளுக்கு இந்த காலகட்டம் உறுதுணையாக அமையலாம். பணியில் இருப்பவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி முன்னேற்றம் காண வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு தகுதியான பணியும், ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு விரும்பிய நிறுவனத்தில் சேரும் வாய்ப்பும் கிடைக்கலாம். புதிய தொழில் தொடங்க திட்டமிடுபவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகலாம். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், வருமானமும் மேம்படக்கூடும். உடல்நலத்திலும் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

கும்பம்

கும்ப ராசியினருக்கு சனியின் நேரடி இயக்கம் பல்வேறு துறைகளில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கலாம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவர்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறக்கூடும். வெளிநாட்டில் வேலை அல்லது கல்வி வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருப்பார்களுக்கு நல்ல செய்தி கிடைக்கலாம். தொழில் வாழ்க்கையில் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைப்பதுடன், தன்னம்பிக்கையும் அதிகரிக்கலாம். மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களை பெறுவதற்கும் போட்டி தேர்வுகளில் வெற்றி காண்பதற்கும் வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களும் வணிக வாய்ப்புகளும் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவக்கூடும்.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan